சிறுவயதில் தனது தங்கையை தாங்கு தாங்கென்று, தங்கத்தட்டில் தாங்கும் அண்ணன், கொஞ்சம் வளர்ந்த பிறகு அவளுக்கு பரம எதிரயாகவே மாறிவிடுகிறான். பெற்றோர்கள் கண்-அசரும் நேரத்தில் இருவரும் அடித்துக்கொள்ள ஆரம்பித்து விடுவர். இதற்கு காரணம் என்ன? அண்ணனும்-தங்கையும் எப்போதும் எதிரும் புதிருமாகவே இருப்பது ஏன்?
பொறுப்புகள்:
இந்திய குடும்பங்களை பொறுத்த வரை, பெற்றோர்கள் தங்களின் குடும்பத்தினர் மீது பெரும் எதிபார்ப்புகளை வைத்திருப்பர். அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, சிறு வயதிலேயே அதிக அழுத்தம் கொடுக்க ஆரம்பித்து விடுவர்.
உதாரணத்திற்கு, மூத்த பிள்ளை இருந்தால், அவர்கள் எது செய்தாலும் இளைய பிள்ளைக்கு தவறான எடுத்துக்காட்டாக ஆகி விடுமோ என்ற பயத்தில் அவர்களை அவர்களின் எண்ணத்தின் படி செயல்பட விட மாட்டார்கள். போதாக்குறைக்கு “நீதான் பெரிய பொண்ணு/பிள்ளை உனக்கு அடுத்தங்கள பத்திரமா பாத்துக்கணும்” என்று கூறி வளர்ப்பர். இது போன்ற பொறுப்பு ஒப்படைக்க படும் போது, பெரிய பிள்ளைகள் தங்களுக்கு அடுத்தவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைப்பர். இதனால் சண்டைகள் வரும்.
குடும்ப அமைப்பு:
பெரும்பாலான இந்திய குடும்பங்கள், கூட்டுக்குடும்பங்களாக இருக்கின்றன. இதனால் பல நேரங்களில் சில விஷயங்களுக்கு உரிமைகள் மறுக்கப்படும். அப்போது ஏற்படும் கோபம், சண்டையாக வெடிக்கலாம்.
பெற்றோர்கள் கொடுக்கும் கவனம்:
குழந்தைகளுக்கு, பெற்றோரின் கவனிப்பு இருந்து கொண்டே இருக்க வேண்டும். அந்த கவனிப்பு இருந்தால்தான் பெற்றோர் நம் மீது அன்பு வைத்திருக்கின்றனர் என்று குழந்தைகள் நினைத்துக்கொள்ளும். எனவே, பெற்றோர்கள் ஒரு குழந்தையை ஒரு மாதிரி கவனித்துவிட்டு, இன்னொரு குழந்தையை வேறு மாதிரி கவனிக்கும் போத் கண்டிப்பாக பொறாமை காரணமாக பிரச்சனை எழலாம்.
போட்டி:
பொதுவாகவே, சகோதர-சகோதரிக்குள் ஒரு போட்டி மனப்பான்மை இருந்து கொண்டே இருக்கும். அதிலும், இந்தியாவில் நன்றாக படிக்கும் குழந்தையை ஒரு மாதிரியும், படிக்க பிடிக்காத குழந்தையை ஒரு மாதிரியும் நடத்துவர். இதனால், இருவருக்குள்ளும் “நன்றாக படித்தால்தான் பெற்றோர் நம்மை நன்றாக நடத்துவர்” என்ற எண்ணம் தோன்றிவிடும். இதுவும், சண்டை போட ஒரு காரணமாக அமையலாம்.
வெவ்வேறு விதமான ஆளுமைகள்:
ஒவ்வொருவரின் குணாதிசயமும் வெவ்வேறாக இருக்கும். அனைவரும் ஒரே மாதிரி இருக்கப்போவதில்லை. பிடித்தங்களும், வாழ்க்கை பார்க்கும் முறையும் வேறாக இருப்பதால், அண்ணன்-தங்கைக்குள் பிரச்சனை வரலாம். இதனால், பல தவறான புரிதல்களும் உண்டாகலாம். உதாரணத்திற்கு, படிப்பை முதன்மை படுத்தும் சகோதரருக்கும், விளையாட்டை முதன்மை படுத்தும் சகோதரிக்கும் ஒத்துப்போகாமல் பாேகலாம்.
மேலும் படிக்க | ஷாம்பூவை தண்ணீரில் கலக்கிதான் யூஸ் பண்ணனும்! ஏன் தெரியுமா?
நெறிமுறைகள்:
இந்திய இல்லங்களில், அன்பை எப்படி வெளிக்காட்ட வேண்டும் என்பதை யாருமே சொல்லிக்கொடுப்பதில்லை. தனது தங்கைக்கு பிடித்த ஆடை அல்லது உணவை வாங்கி கொடுக்கும் அண்ணன், அதை தான் செய்து விட்டேன் என தெரியக்கூடாது என பயங்கரமாக சமாளிப்பார். காரணம், அன்பை வெளிக்காட்டுவது இங்கு பலருக்கு அருவருப்பானதாக இருக்கிறது. இதனாலும் சண்டைகள் எழும்.
டாக்ஸிக் குணாதிசயம்..
சிறு வயதில், ஆண் பிள்ளையை ஒரு மாதிரியாகவும் பெண் பிள்ளையை ஒரு மாதிரியாகவும் சில வீட்டில் வளர்ப்பர். உதாரணத்திற்கு ஆண் பிள்ளைகளுக்கு பலவித சலுகைகள் கிடைக்கும், அதுவே பெண் பிள்ளைகளுக்கு அது கிடைக்காமல் போகும். இதனால் பல அண்ணன்கள் டாக்ஸிக் ஆண்களாக வளருவர். சிறுவயதில் இருந்தே தனது அண்ணனுடன் ஒத்துப்பாேகாமல் இருக்கும் தங்கைகள், வளர்ந்தவுடன் அவர்களின் உறவையே மொத்தமாக தலைமுழுகி விடுகின்றனர்.
மேலும் படிக்க | இரவில் தூங்கும் முன் தண்ணீர் குடிக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ