இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகாய் போர் விமானம் மாயமானது

Last Updated : May 23, 2017, 03:26 PM IST
இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகாய் போர் விமானம் மாயமானது title=

ஐஎஎப் சுஹோய் -30 போர் ஜெட் விமானம்  2 விமானிகளுடன் மாயமானதால், விமானத்தை தேடும் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது.

திஸ்பூரில் இருந்து 2 விமானிகளுடன் புறப்பட்ட விமானம் 60 கிலோ மீட்டர் தொலைவில் சென்றபோது ரேடார் சிக்னலில் இருந்து மறைந்தது. 

சீன எல்லைப் பகுதியில் விமானம் மாயமானது.

இந்திய விமானப்படை விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

அசாம் மாநிலம் திஸ்பூரில் இருந்து வழக்கமான பயிற்சி பணிக்காக புறப்பட்டு சென்ற விமானம் மாயமானது என விமானப்படை தகவல்கள் தெரிவித்து உள்ளன.

Trending News