திரிபுரா, நாகலாந்து, மேகாலயா தேர்தலில் மக்கள் தீர்ப்பை மதிப்பதாக ராகுல்காந்தி கருத்து தெரிவித்தள்ளார்.
நேற்று முன்தினம், வெளியான திரிபுரா, நாகாலாந், மேகாலயா தேர்தல் முடிவுகள் திரிபுராவில் தனிபெரும்பான்மையுடன் வெற்றிப் பெற்றது. இதனால் அம்மாநிலத்தில் பாஜக ஆட்சி உறுதியானது.
நாகாலந்த் மற்றும் மேகாலயாவில் யார் ஆட்சியை பிடிப்பார் என குழப்பங்கள் நிலவி வந்த நிலையில் பாஜக கூட்டனியால் ஆன ஆட்சியே நடக்கவுள்ளது என்பதும் உறுதியானது. இதனால் 3 மாநிலங்களிலும் பாஜக கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
இந்நிலையில், திரிபுரா, நாகலாந்து, மேகாலயா தேர்தலில் மக்கள் தீர்ப்பை மதிப்பதாக ராகுல்காந்தி கருத்து தெரிவித்தள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் காங்கிரஸை பலப்படுத்தி மக்கள் நம்பிக்கையை உறுதியாக பெறுவோம் என அவர் கூறியுள்ளார்.
இத்தாலியில் இருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
Congress party respects the mandate of the people of Tripura, Nagaland & Meghalaya. We are committed to strengthening our party across the North East&to winning back the trust of the people. My sincere thanks to each & every Congress worker who toiled for the party: Rahul Gandhi pic.twitter.com/VRVMuHx32T
— ANI (@ANI) March 5, 2018