கேரளா: நாட்டில் கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் கேரளா சரியான பாதையில் செல்வதாக தெரிகிறது. தென் இந்தியா மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் இன்று (புதன்கிழமை) புதிதாக ஒரே ஒருவருக்கு மட்டுமே கோவிட் -19 தொற்று பாதிப்பு என்ற மிகப்பெரிய நற்செய்தி வந்தது. இந்த தகவலை அளித்த முதலமைச்சர் பினராயி விஜயன், இப்போது மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 387 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 167 பேருக்கு மட்டுமே வைரஸ் செயலில் உள்ளது எனத் தெரிவித்தார். நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு மத்தியில், இந்த செய்தி கேரள அரசின் நடவடிக்கைக்கு கிடைத்த வெற்றி என்று தான் கூறவேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் கேரளா ஒரு காலத்தில் முதலிடத்தில் இருந்தது:
கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் முதன்முதலில் உறுதி செய்யப்பட்ட மாநிலம் கேரளா என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஜனவரி 30 ஆம் தேதி, நாட்டின் முதல் கோவிட் -19 நோயாளி கேரளாவின் திரிசூரில் கண்டுபிடிக்கப்பட்டார். அதன் பின்னர் மாநிலத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நீண்ட நாட்களாக கேரளா கோவிட் 19 நோயாளிகளின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. ஆனால் இன்று அந்த பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது. எந்தவொரு மாநிலமும் முதலில் வர விரும்பாத பட்டியல் இது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, 2,687 உறுதிப்படுத்தப்பட்ட நோய்த்தொற்றுகளுடன் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது.
Only 1 new #COVID19 case reported in the state today; taking the total number of positive cases in the state to 387, of which 167 are active: Kerala CM Pinarayi Vijayan pic.twitter.com/vlEK1IfDJW
— ANI (@ANI) April 15, 2020
வேகமாக மோசமடைந்து வரும் சூழ்நிலையை கையாள கேரளா ஒரு எடுத்துக்காட்டு:
கொரோனாவுக்கு எதிரான போரில் கேரளா இவ்வளவு பெரிய வெற்றியை எவ்வாறு அடைந்தது என்பது இயல்பான கேள்வி. உண்மையில், "கடவுளின் நாடு" என்று அழைக்கப்படும் கேரளா, மாநில அரசு மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் துல்லியமான மூலோபாயத்தை எடுத்து அதற்கேற்ப உறுதியான நடவடிக்கை எடுப்பதன் மூலம், மோசமடைந்து வரும் சூழ்நிலையை விரைவாக நிர்வகிப்பது மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களுக்கும் ஒரு முன்மாதிரியாக அமைந்தது.
காசர்கோட்டில் கொரோனா சென்டர் அதிரடி:
கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டமான காசர்கோட்டை எடுத்துக் கொள்ளுங்கள். இதுவரை 135 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் கொரோனா மையமாக இந்த மாவட்டம் உருவானது. முதலமைச்சர் விஜயன் காசர்கோட்டின் சிறப்பு அதிகாரியாக வேகமாக ஐபிஎஸ் அதிகாரி விஜய் சகாரேவை நியமித்தபோது, அங்கு நிலை மிகௌம் மோசமடைந்திருந்தது அங்க மாவட்டத்தில் வைரஸ் பரவுவதை தடுக்க IPS சகரே ஒரு முழுமையான மூலோபாயத்தில் பணியாற்றினார். அதற்கான பலனும் கிடைத்தது.
ஆல்ரவுண்ட் மூலோபாயத்தால் கொரோனா தோற்றது:
போலீஸ் ரோந்துப் பணியை அதிகரிப்பது, சந்தேக நபர்களை உடனடியாக தனிமைப்படுத்துதல், தரவுகளை சேகரித்தல், மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சீல் வைப்பது, ரோந்துப் பணிகளை அதிகரிப்பது மற்றும் நெருக்கமான கண்காணிப்புக்கு ட்ரோன்களைப் பயன்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் இதில் அடங்கும். கொரோனா ஹாட்ஸ்பாட்டில் ஊரடங்கு உத்தரவை கண்டிப்பாக பின்பற்றப்படுவதை கேரள அரசு உறுதி செய்தது. இதற்காக, மக்கள் தங்கள் வீடுகளுக்கு தேவையான பொருட்களைப் பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன் விளைவாக தடுப்பு நடவடிக்கையில் மாநிலம் முன்னால் உள்ளது. இன்று (புதன்கிழமை) மத்திய பிரதேசத்தில் 294 வழக்குகள் பதிவாகிய நிலையில், கேரளா முழுவதிலும் இருந்து ஒரே ஒரு புதிய நோயாளி மட்டுமே பதிவாகியுள்ளது.