Hindi Diwas: அலுவல் மொழியாக இந்தி மாறிய வரலாறும், சரித்திரமும்...

எம்மொழியாக இருந்தாலும் அதை வளர்ப்பது வரவேற்கத்தக்கதே. இன்று இந்தி திவஸ், அதாவது இந்தி தினம்... இந்தி பேசும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில் மொழிசார் பல கேள்விகளும் எழுகின்றன...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 14, 2021, 02:15 PM IST
  • ஆண்டுதோறும் செப்டம்பர் 14ம் தேதியன்று இந்தி மொழி நாள் அனுசரிக்கப்படுகிறது
  • அலுவல் மொழியாக இந்தி மாறிய வரலாறும், சரித்திரமும்...
  • தாய்மொழியுடன் இந்தியையும் பயன்படுத்தக் கட்டாயப் படுத்தக் கூடாது
Hindi Diwas: அலுவல் மொழியாக இந்தி மாறிய வரலாறும், சரித்திரமும்...  title=

சென்னை: இந்தி மொழி நாள் ஆண்டுதோறும் செப்டம்பர் 14 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்தியை பரப்புவதற்காக மத்திய அரசு மேற்கொள்ளும் திட்டங்களில் இந்தி நாளும் ஒன்று. இந்தியில் வெளியாகும் கலை, இலக்கியம், கவிதை போன்ற படைப்புகளில் சிறப்பானவற்றைத் தேர்ந்தெடுத்து பரிசுகளும் வழங்கப்படுகின்றன.

சரித்திரத்தில் பின்நோக்கிச் சென்றால் 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று இந்தி பேசாத பிற மொழியினரின் எதிர்ப்பையும் மீறி, இந்திய அரசு இந்தியை அலுவல் மொழியாக, ஏற்றுக் கொண்டது. இந்தி பேசாத மக்களிடையே இந்தியை பரப்புவதற்கு தொடங்கப்பட்ட ஆட்சி மொழித் துறை என்ற பிரிவு இந்தி மொழி நாளை அனுசரிக்கிறது. 1975 ஆம் ஆண்டு முதல் இந்தி மொழி நாள் அனுசரிக்கப்படுகிறது.

எம்மொழியாக இருந்தாலும் அதை வளர்ப்பது வரவேற்கத்தக்கதே. ஆனால், பிராந்திய மொழிகளை அழுத்தி, அவற்றின் இடத்தை ஆக்ரமிக்க நினைப்பது தான் கண்டிக்கத்தக்கது. இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் தமிழர்கள் முன்னிலை வகிக்கின்றானர். இந்தி திணிப்புக்கு எதிரான தமிழ்நாட்டின் போராட்டம் சரித்திரத்தில் இடம் பெற்றது. 

Also Read | அதிகாரப்பூர்வ மொழிகள் சட்டத்தின் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவும்- Madras HC

ஆனால் மத்திய அரசு நாசுக்காக பல வழிகளில் இந்தித் திணிப்பை தொடர்ந்த் செய்துவருகிறது. இந்தியர்கள் அனைவரும் அலுவல் மொழியான இந்தியுடன் தாய்மொழியையும் இணைத்து பயன்படுத்துவதில் தான் நாட்டின் முன்னேற்றம் அடங்கியிருக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருக்கிறார். 

மத்திய அமைச்சரின் அறிவுறுத்தல் பற்றி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மருத்துவர் இராமதாசு, இது மறைமுகமாக இந்தியத் திணிக்கும் செயல் என்று டிவிட்டரிலேயே பதிலளித்துள்ளார்.  

மேலும், இந்தி திவாஸ் நாளில் இந்தி மொழி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பேசுவது தவறில்லை. ஆனால், இந்தியைப் பயன்படுத்தினால் தான் நாடு முன்னேறும்  என்று கூறுவதில் மறைபொருள் இருக்கிறது என்றும் பாமக தலைவர் மருத்துவர் இராமதாசு கூறுகிறார்.

தமிழ் உள்ளிட்ட எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக கிடப்பில் இருக்கும் நிலையில், அந்தக் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றி மொழிச் சமநிலையை  மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும் என்றும் பாமக சார்பில் அதன் நிறுவகத் தலைவர் மருத்துவர் இராமதாசு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஹசாரி பிரசாத் திவேதி, காக்கா காலேல்கர், மைதிலி சரண் குப்த் மற்றும் சேத் கோவிந்த் தாஸ் மற்றும் பியூஹர் ராஜேந்திர சிம்ஹா போன்றவர்களின் முயற்சியால் இந்திய குடியரசின் இரண்டு அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒன்றாக இந்தி ஏற்றுக்கொள்ளப்பட்டது.  இந்தியை அலுவல் மொழியாக மாற்ற அரும்பாடுபட்ட, பியூஹர் ராஜேந்திர சிம்ஹாவின் பிறந்த நாளான 1949 செப்டம்பர் 14 ஆம் தேதி இந்தி நாளாக அனுசரிக்கப்படுகிறது.

ஒரு மொழிக்கு மட்டும் ஒரு தினத்தை மத்திய அரசு அனுசரிப்பது சரியானதா? செப்டம்பர் 14-ந்தேதி இந்தி தினம் என்றால்,  இந்தியாவின் பிற மொழிகளுக்கான தினங்கள் அனுசரிக்கப்படுகிறதா?. இந்தி அலுவல் மொழியாக இருப்பதால் இந்தி தினம் அனுசரிக்கப்பட்டால், இணை அலுவல் மொழியாக இருக்கிற ஆங்கிலத்துக்கு ஏதேனும் தனியாக ஒரு தினம் இல்லையே? என் மொழி அறிஞர்கள் மற்றும அர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Also Read | நீட் மசோதா சட்டமாகுமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News