கடந்த 2020 ஆண்டு டெல்லியில் சி.ஏ.ஏவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றபோது பா.ஜ.க அமைச்சர் அனுராக் தாக்கூர், போராட்டக்காரர்களுக்கு எதிராகச் செயல்படுமாறு தனது தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்ததாக சர்ச்சை எழுந்தது.
அமைச்சர் அனுராக் தாக்கூரின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு விளக்கம் அளிக்குமாறு தேர்தல் ஆணையம் கடந்த 2020 ஜனவரி 29ஆம் தேதி அனுராக் தாக்கூருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இது பின்னர் வழக்காக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தற்போது டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திர தாரி சிங் , "நீங்கள் புன்னகையுடன் ஒன்றை பேசுகிறீர்கள் என்றால், அது குற்றமாக கருதப்படாது. அதேநேரம் மற்றவர்களைப் காயப்படுத்தும் வகையில் எதையேனும் பேசினால், நிச்சயமாக அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். " என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், அரசியல் சார்ந்த விவாதங்களின் அடிப்படையிலான பேச்சுகளின் மீது எஃப்ஐஆர் பதிவு செய்வதற்கு முன்னதாக ஒரு சமநிலையில் நாம் இருக்க வேண்டும்" என்றார்.
மேலும் படிக்க | Whatsapp-ல் இந்த அம்சங்கள் கூட இருக்கா?
மேலும், "தேர்தல் நேரத்தில் பேசப்படும் பேச்சுக்கும் மற்ற நேரங்களில் பேசப்படும் பேச்சுக்கும் வித்தியாசம் உள்ளது. ஏனென்றால் தேர்தல் நேர பேச்சுகளை வழக்கமான பேச்சாக எடுத்துக் கொள்ள முடியாது. அதேநேரம் சாதாரண நேரத்தில் தேர்தல் நேரத்தில் பேசுவதுபோல் தாக்கி பேசுகிறீர்கள் என்றால் அதில் உள்நோக்கம் உள்ளது என்று அர்த்தம். தேர்தல் சமயத்தில் அரசியல்வாதிகள் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொள்ளும்படி பேசிக் கொள்வது இயல்பானது தான் என்றார்.
மேலும் இந்த வழக்கில் மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அமைச்சர் குறிப்பிட்ட சமூகத்தைக் குறி வைத்து தாக்கி பேசியுள்ளதாக வாதிட்டனர். அதற்கு நீதிபதி, ''இந்தப் பேச்சில் வகுப்புவாத நோக்கம் எங்கே இருக்கிறது? போராட்டகாரர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கல் என்று காட்ட ஏதேனும் ஆதாரம் இருக்கிறதா'' என்று கேள்வி எழுப்பினார். இதையடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் படிக்க | இந்த ஆப் உங்கள் மொபைலில் இருந்தால் உடனே டெலீட் செய்யவும்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR