குஜராத் 2-வது கட்ட தேர்தல்: பிரதமர் மோடி தாயார் வாக்களித்தார்!!

குஜராத் மாநிலத்தில் 2-வது கட்ட சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வாக்களிக்க மோடியின் தாயார் ஹீராபென் வருகை தந்தார். காந்திநகர் வாக்குச் சாவடியில் மோடியின் தாயார் ஹீராபென் வாக்களித்தார்.

Last Updated : Dec 14, 2017, 08:59 AM IST
குஜராத் 2-வது கட்ட தேர்தல்: பிரதமர் மோடி தாயார் வாக்களித்தார்!! title=

குஜராத் மாநிலத்தில் 2-வது கட்ட சட்டசபை தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வாக்களிக்க மோடியின் தாயார் ஹீராபென் வருகை தந்தார். காந்திநகர் வாக்குச் சாவடியில் மோடியின் தாயார் ஹீராபென் வாக்களித்தார்.

குஜராத் மாநிலத்தில் 2-வது கட்ட சட்டசபை தேர்தல் இன்று நடைபெறுகிறது. 93 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு தொடங்கியது. அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

குஜராத் சட்டசபைக்கான 182 தொகுதிகளில் 89 இடங்களில் கடந்த டிசம்பர் 9-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. அந்த வகையில் இன்று 14 மாவட்டங்களில் உள்ள 93 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இன்று நடக்க இருக்கும் குஜராத் மாநில 2-வது கட்ட தேர்தலில் மொத்தம் 851 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

இந்நிலையில் குஜராத் 2-வது கட்ட சட்டசபை தேர்தல் வாக்களிக்க மோடியின் தாயார் ஹீராபென் வருகை தந்து அங்கு வாக்களித்தார்.

Trending News