ரஃபேல் விமான ஊழல் போன்று பணமதிப்பிலப்பு நடவடிக்கையும் மிகப்பெரிய ஊழல் என மோடி அரசை ராகுல்காந்தி கடுமையாக தாக்கியுள்ளார்!
கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பிரான்சிடம் இருந்து, ரபேல் போர் விமானங்களை வாங்க, ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பில் ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு குறித்த காங்கிரஸ் காட்சியின் புகாருக்கு பாஜக தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், தெலங்கானா சட்டசபை தேர்தல் வரும் 7 ஆம் தேதி நடை பெற உள்ள நிலையில், அம்மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர பிரட்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையடுத்து, முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் பணமதிப்பிழப்பை ஆதரித்தாரா? இல்லையா?என்ற தலைப்பில் ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியான கட்டுரையை தனது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.
Demo like Rafale was a crime against India & a huge scam. Parrikar distanced himself from Rafale to save his skin. Mr Subramanian is doing the same with Demo. I wonder why he didn’t resign when he disagreed so much? Don’t worry India, the guilty will be investigated and punished. https://t.co/JcCPOH7jgr
— Rahul Gandhi (@RahulGandhi) November 29, 2018
மேலும் அந்த பதிவில், "ரஃபேல் போல பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் பெரிய ஊழல் தான். மனோகர் பரிக்கர் ரஃபேல் விவகாரத்தில் இருந்து எப்போதும் தள்ளியே இருந்தார். அதே போல சும்பிரமணியனும் தற்போது செய்கிறார். பணமதிப்பிழப்பு கொள்கையில் உடன்பாடு இல்லை என்றால் பதவி விலகி இருக்கலாமே?. கவலைப்படாதீர்கள்... இவை அனைத்து குறித்தும் விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.