கொரோனா காலத்தின் நெருக்கடியில் விவசாயிகளுக்கான உதவித்தொகையான, பிரதமர் கிசான் சம்மன் நிதி 8 திட்டத்தின் 8 வது தவணை தொகையை, இன்று அதாவது மே 14 அன்று விவசாயிகளின் வங்கிகளில் செலுத்தபட்டது.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN scheme) திட்டத்தின் கீழ், 9.5 கோடிக்கும் அதிகமான விவசாய குடும்பங்களுக்கு ரூ .19,000 கோடிக்கு மேலான தொகை, ஒரே நேரத்தில், ஒரு நொடியில், திட்ட பயனர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஒரே நாளில் செலுத்தப்பட்ட மிகப்பெரிய தொகை இதுவாகும்.
அப்போது, உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), நாடு ஒரு கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போராடுவதாகக் கூறிய பிரதமர் மோடி, கொரோனாவின் இரண்டாவது அலைகளை எதிர்த்துப் போராடுவதில் அரசு தீவிரமாக செயலாற்றி வருவதாகவும், போரில் வெற்றி பெறுவது நிச்சயம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
Amid the difficult challenges of #COVID19, farmers have made records in agriculture & gardening while Govt is also setting new records on procurement on MSP every year. In comparison to last year, 10% more wheat has been purchased on MSP this year: Prime Minister Modi pic.twitter.com/J7A8UVBxOm
— ANI (@ANI) May 14, 2021
மேலும், இதுவரை 18 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், மக்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த கொரோனா வைரஸ் (Corona Virus) என்னும் எதிரியிடம், மக்கள் தங்கள் நெருங்கமானவர்களை இழந்துவிட்டதாகக் கூறிய மோடி, “நாட்டு மக்கள் இதனால் அனுபவித்த வேதனைகள், அதே வலியை நானும் உணர்கிறேன்.” எனக் கூறினார்.
முன்னதாக, பிரதமர் மோடி தனது ட்வீட்டில், "நாட்டின் பல கோடி விவசாயிகளுக்கு மிக முக்கியமான நாள். பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 8 வது தவணையை வீடியோ கான்பரன்சிங் மூலம் செலுத்துவது எனது பாக்கியம் என கருதுகிறேன். இந்த சந்தர்ப்பத்தில், நமது விவசாய சகோதர-சகோதரிகளுடன் பேச இருக்கிறேன் என கூறியிருந்தார்.
ALSO READ | Sputnik V தடுப்பூசியின் விலை குறித்து Dr Reddy's வெளியிட்டுள்ள முக்கிய அறிக்கை
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR