அடுத்த 2-3 மாதங்களுக்குள் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு 50,000 வேலை வாய்ப்புகள்

அடுத்த 2-3 மாதங்களுக்குள் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலை உருவாக்கப்படும். முழு உற்சாகத்துடன் அதில் சேருமாறு இளைஞர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம் என ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்தார்

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 28, 2019, 06:30 PM IST
அடுத்த 2-3 மாதங்களுக்குள் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு 50,000 வேலை வாய்ப்புகள் title=

ஸ்ரீநகர்: அடுத்த 2-3 மாதங்களுக்குள் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் 50 ஆயிரம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்கும் என்று ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தில் 50 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புக்களை உருவாக்கப்படும் என இன்று அறிவிக்கிறோம் என்று மாலிக் கூறினார். முழு உற்சாகத்துடன் அதில் சேருமாறு இளைஞர்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றோம். அடுத்த 2-3 மாதங்களில் ஆட்சேர்ப்பு நடைபெறும் எனக் கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் குறித்து சிலர் பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள். ஜம்மு காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை என்று ஆளுநர் கூறினார். ஜம்மு-காஷ்மீரில் ஒரு நபர் கூட இறக்கவில்லை என்றும், கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்படும் என்றும் அவர் கூறினார். ஒவ்வொரு காஷ்மீரியின் வாழ்க்கையும் எங்களுக்கு விலைமதிப்பற்றது. எந்தவொரு உயிர் அல்லது சொத்து இழப்பை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் எனவும் கூறினார். 

நோயாளிகளை வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வாகனங்கள் அனுப்பப்படுவதாக கவர்னர் தெரிவித்தார். குப்வாரா மற்றும் ஹண்ட்வாரா மாவட்டங்களில் மொபைல் இணைப்பை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள மாவட்டங்களில்  தொலைத்தொடர்பு வசதி விரைவில் தொடங்கப்படும். ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளிலும் வரும் நாட்களில் வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்படும் எனவும் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்தார்.

Trending News