ஜம்மு-வில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்: ஆளுநர் வோரா அழைப்பு!

ஜம்மு-காஷ்மீரில் இன்று நடைபெற உள்ள அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு ஆளுநர் வோரா அழைப்பு விடுத்துள்ளார்!

Last Updated : Jun 22, 2018, 09:00 AM IST
ஜம்மு-வில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்: ஆளுநர் வோரா அழைப்பு! title=

மறைந்த காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சயீத் மரணத்திற்கு பிறகு மாநிலத்தில் பி.டி.பி. மற்றும் பா.ஜ.க கூட்டணியில் சிக்கல் ஏற்பட்டதையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 

இதையடுத்து, பா.ஜ.க-வுடனான கூட்டணி எனது தந்தை முப்தி முகமது சயீதின் விருப்பத்தில் அமைந்தது என அவரது மகள் மெஹபூபா முப்தி தெரிவித்துள்ளார். இதனையடுத்து பி.டி.பி. - பா.ஜ.க கூட்டணி தொடர்ந்து வந்தது. இதனை தொடர்ந்து, ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் வன்முறையை கட்டுப்படுத்த தவறியதால் முதல்வர் மெஹபூபா முப்தி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பா.ஜ.க (ஜூன் 19) வாபஸ்பெற்றது.

இதனையடுத்து, மெஹபூபா முப்தி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால், அங்கு தற்போது ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் பேரில் ஆளுநரின் ஆட்சி அமலுக்கு வந்தது.

இந்நிலையில் தற்போது, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு மாநில ஆளுனர் வோரா அழைப்பு விடுத்துள்ளார். 

இதுதொடர்பாக ஆளுநர் தகவல் கூறும்போது,, ! இந்த கூட்டத்தில், காஷ்மீரில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலை மற்றும் மாநிலத்தின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து ஆலோசனை மேலும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது.  

இந்த கூட்டத்தில், தேசிய கட்சிகளின் மாநில தலைவர்கள் உட்பட அனைத்து கட்சி தலைவர்களுக்கும் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. 

Trending News