ஒரே நாடு, ஒரே வரி என்ற முழக்கத்துடன் நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி இன்றுடன் ஓராண்டு நிறைவு!
ஒரே நாடு ஒரே வரி' என்ற கொள்கையின் அடிப்படையில், ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் கடந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் ஜிஎஸ்டி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், அப்போதைய ஜனாதிபதியாக இருந்த பிரணாப் முகர்ஜியும், பிரதமர் நரேந்திர மோடியும் புதிய வரி விதிப்பு முறையைத் தொடங்கி வைத்தனர். இதன் மூலம் அப்போது அமலில் இருந்த 12-க்கும் அதிகமான வரி விதிப்பு முறைகள் முடிவுக்கு வந்தன. இதனையடுத்து 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமலானது.
இந்நிலையில், ஜி.எஸ்.டி அமலுக்கு வந்து நாளையுடன் ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது. நாளை (ஜூலை 1-ம் தேதி 2018) ஜி.எஸ்.டி நாளாக மத்திய அரசு கொண்டாட உள்ளது. இந்திய வரிவிதிப்பில் முன்னெப்போதும் இல்லாத சீர்திருத்தம் கொண்டு வந்ததை நினைவுகூறும் வகையில் முதலாம் ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. நாளைய தினம் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
Government to celebrate tomorrow 1st July 2018 as ‘GST day’, to commemorate the first year of the 'unprecedented reform of Indian taxation.'
— ANI (@ANI) June 30, 2018
டெல்லி அம்பேத்கர் பவனில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் நிதி மந்திரி பியூஷ் கோயல், தொழில் நிறுவன கூட்டமைப்புகள், வர்த்தக சங்கங்கள் மற்றும் வரிதுறை அதிகாரிகள், ஸ்ரீ ஷிவ் பிரதாப் சுக்லா சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.