புது டெல்லி: கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவின் 10 வது நாளில் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் கொரோனா நோயினால் பாதிப்போரின் எண்ணிக்கை தினசரி வேகமாக அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 525 பேருக்கு COVID-19 பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவரை ஒரு நாளில் மிகப்பெரிய எண்ணிக்கை இதுவாகும். இந்தியாவில் மொத்த COVID-19 நேர்மறை வழக்குகள் 3072 ஆக உயர்ந்துள்ளன. என (இதில் 2784 பேர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 213 குணப்படுத்தப்பட்ட வர்கள் மற்றும் 75 இறப்புகள் உட்பட) சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) 74 வழக்குகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 73 வழக்குகள் டெல்லி நடைபெற்ற மத கூட்டத்தில் கலந்து கொண்டார்வர்கள். மகாராஷ்டிராவிலிருந்தும் அதிக எண்ணிக்கையிலான பாதிப்பு வந்துள்ளது. அங்கு 500 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லி நிஜாமுதீன் மார்க்கஸில் உள்ள தப்லிகி ஜமாஅத்தின் நிகழ்ச்சி காரணமாக, நாட்டின் அனைத்து நேர்மறையான வழக்குகளில் சுமார் 30 சதவீதம் தொடர்புடையதாக இருக்கிறது என மத்திய சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது. சுற்றுலா விசாவில் வந்து தப்லிகி நடவடிக்கைகளில் பங்கேற்ற 960 வெளிநாட்டவர்களின் விசாக்களை தடுப்பு பட்டியலில் மத்திய உள்துறை அமைச்சகம் வைத்துள்ளது.