‘உலகின் சிறந்த ஜூனியர் இன்ஜினியர்’: ஒசாமா பின்லேடனின் படத்தை அலுவலகத்தில் வைத்த உத்தரப்பிரதேச மாநில மின்துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அல்கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடன் ‘உலகின் சிறந்த ஜூனியர் இன்ஜினியர்’ என்று கூறி அவரது புகைப்படத்தை தனது அலுவலகத்தில் வைத்திருந்த அதிகாரி பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார் என்ற செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகிறது.
கொல்லப்பட்ட அல்-கொய்தா நிறுவனர் ஒசாமா பின்லேடனை "உலகின் சிறந்த ஜூனியர் இன்ஜினியர்" என்று வர்ணித்து, அவரது புகைப்படத்தை தனது அலுவலகத்தில் வைத்ததற்காக உத்தரப்பிரதேச மாநில அரசின் மின்சார விநியோக நிறுவன அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
மேலும் படிக்க | 9/11 தாக்குதலுக்குப் பிறகு ஒசாமா பின்லேடன் செய்ய திட்டமிட்டிருந்த தீவிரவாத தாக்குதல்
தக்ஷினாஞ்சல் வித்யுத் வித்ரன் நிகாம் லிமிடெட் ( Dakshinanchal Vidyut Vitran Nigam Ltd (DVVNL)) துணைப்பிரிவு அதிகாரி (sub-divisional officer (SDO)) ரவீந்திர பிரகாஷ் கவுதம் என்ற அதிகாரி, ஒசாமா பின்லேடனை தனது முன்னுதாரம் என்று கூறிவந்துள்ளார்.
அவர், தனது அலுவலகத்தில் லேடனின் படத்தை வைத்திருந்தது தெரியவந்துள்ளது. "மதிப்பிற்குரிய ஒசாமா பின்லேடன், உலகின் தலைசிறந்த ஜூனியர் இன்ஜினியர்" என்ற வாசகத்தையும் பின்லேடனின் புகைப்படத்திற்கு கீழே ஒரு சிறிய குறிப்பாக எழுதி வைத்திருந்தார்.
இந்தியாவின் அரசு அலுவலகத்தில் தீவிரவாதி பின்லேடனின் புகைப்படம் இருந்தது தொடர்பான செய்தி சமூக ஊடகங்களில் வைரலானது, இந்த விஷயத்தை அறிந்த மாவட்ட மூத்த அதிகாரிகள் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டனர்.
மேலும் படிக்க | வேற்று கிரகவாசிகள் பூமியைத் தாக்கக்கூடும்
விசாரணையில் புகைப்படம் இருந்த விஷயம் உறுதி செய்யப்பட்டு, எஸ்டிஓ சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உடனடியாக மின் விநியோக அலுவலகத்தில் இருந்த பின்லேடனின் படமும் அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
"சம்பவம் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து DVVNL இன் நிர்வாக இயக்குனர் SDO ரவீந்திர பிரகாஷ் கவுதமை இடைநீக்கம் செய்துள்ளார்" என்று ஃபரூகாபாத் மாவட்ட நீதிபதி சஞ்சய் குமார் சிங் கூறினார்.
இதற்கிடையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரி, தான் பின்லேடனின் புகைப்படத்தை வைத்தது ஒன்றும் தவறான செயல் இல்லை என்று தெரிவித்துள்ளார். அதற்குக் அவர் கூறும் விளக்கம் என்ன தெரியுமா?
"ஒருவருக்கு யார் வேண்டுமானாலும் முன்னுதாரணமாகலாம். ஒசாமா பின்லேடன் உலகின் சிறந்த இன்ஜினியர். அவருடைய புகைப்படம் ஒன்று அகற்றப்பட்டது, ஆனால் என்னிடம் அவருடைய பல புகைப்படப் பிரதிகள் உள்ளன," என்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட கவுதம் தெரிவித்தார்.
மேலும் படிக்க | Zero Gravity உள்ள விண்வெளியில் உடல் உறவு சாத்தியமா; விஞ்ஞானிகள் கூறுவது என்ன..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR