வங்கிகளில் பணம் வாங்க வருபவர்களுக்கு கை விரலில் மை வைக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளார்.
ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று கடந்த 8-ம் தேதி இரவு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுகளை
பெற அறிவுறுத்தப்பட்டது. இதனால் மக்கள் வங்கிகளில் அலை மோதினர். நீண்ட வரிசையில் நின்று தங்கள் ரூபாய் நோட்டுகளை மாற்றி செல்கின்றனர். ஒரே நபர் மீண்டும் மீண்டும் வருவதால்தான் வங்கிகளில் நீண்ட வரிசை ஏற்படுகிறது. இதனை தடுக்கு விதமாக மத்திய அதிகாரி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
இந்த நிலையில் இன்று பொருளாதார செயலர் சக்திகாந்த தாஸ் முக்கிய அறிவிப்பு பற்றி அவர் கூறியாதாவது:-
வங்கிகளில் பணம் வாங்க வருபவர்களுக்கு கை விரலில் மை வைக்கப்படும்
ஒரே நபர் மீண்டும் மீண்டும் வருவதால்தான் வங்கிகளில் நீண்ட வரிசை ஏற்படுகிறது
கைவிரலில் மை வைப்பதால் ஒரே நபரே அடிக்கடி பணம் மாற்றுவது தடுக்கப்படும்
ஒரே நபர் மீண்டும் மீண்டும் பணம் எடுப்பதை இதன் மூலம் தடுக்க முடியும்
கை விரலில் மை வைக்கும் நடைமுறை பெரு நகரங்களில் இன்று முதல் அமலுக்கு வரும்
தேர்தலைப்போல் வங்கியின் கவுண்டரில் மை வைக்கப்படும்
கருப்பு பணம் முதலீடு செய்யப்படுவதை தடுக்க சிறப்பு படைகள் அமைப்பு
கருப்பு பணம் வைத்திருப்போர் தங்களது பணத்தை மாற்ற ஆட்களை அனுப்புகின்றனர்
வங்கி கணக்குகளில் பழைய ரூபாய் தாள்களை செலுத்தாமல் சிலர் அதை மாற்ற முயற்சிக்கின்றனர்.
அரசிடம் போதுமான அளவு பணம் இருப்பதால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்.
உப்பு போதுமான அளவு கையிருப்பு உள்ளது, எனவே தற்காலிகமாக விலை கூடுவதற்கோ? பற்றாக்குறை ஏறபடுவதற்கோ? எந்த காரணமும் இல்லை
அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
நிலைமை படிபடியாக முன்னேறி வருகிறது, வரும் தினங்களில் மேலும் முன்னேற்றம் அடையும் என்று உறுதியளிக்கிறேன்
அரசு மருத்துவமனைகள்,மெடிக்கல்களில் பணம் வாங்கப்படுவதில்லை என்பது குறித்த தகவல் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.