உஜ்ஜைன்: ஒரு பக்கம் வளர்ச்சியை பற்றி நாம பேசிக்கொண்டு இருந்தாலும், மறுபுறம் இன்னும் சில இடங்களில் பல அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்கள் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. அதுவும் அரசு மருத்துவமனையில் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருப்பது பொது மக்கள் இடையே பெரும் அச்சத்தை உருவாக்கி உள்ளது. ஆம் மூன்று வருடமாக பாஜக ஆட்சி செய்தது, தற்போது காங்கிரஸ் ஆட்சி செய்து வரும் மாநிலமான மத்திய பிரதேசம் ஆகும். சுகாதார வசதிகள் தொடர்பாக மத்திய பிரதேசத்தில் கமல்நாத் அரசாங்கத்தால் மேற்கொண்டு வரும் நடவடிக்கை தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றன என்பதற்கு உதாரணமாக, இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அதாவது ஒரு பெண்ணுக்கு கருத்தடை செய்த பிறகு, அவரை வெற்று தரையில் படுக்கவைக்கப்பட்ட செய்தி சில நாட்களுக்கு முன்பு பெரும் விவாதத்துக்கு உள்ளானது. தற்போது இதுபோன்ற ஒரு சம்பவம், உஜ்ஜைன் மாவட்டத்தில் நாக்தாவில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உண்மையில், நாக்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தொகுதி அளவிலான கருத்தடை முகாமில் மொபைல் மற்றும் டார்ச்லைட் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டன. அறுவை சிகிச்சை செய்யப்படும் பெண் படுத்து இருக்கிறாள். அவருக்கு பக்கத்தில் நிற்கும் மற்றொரு பெண் மொபைல் மூலம் வெளிச்சத்தை அளிக்கிறாள். கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் செவிலியரின் தலையில் டார்ச்லைட் இருப்பதையும் படத்தில் தெளிவாகக் காணலாம். அந்த அறுவை சிகிச்சை ஜன்னலிலிருந்து வரும் ஒளியிலும், ஒளிரும் விளக்கின் வெளிச்சத்திலும் செய்யப்பட்டது.
நாக்தாவில் உள்ள அரசு மருத்துவமனையின் இந்த அலட்சியம் நடந்துள்ளது. இதுக்குறித்து பொது மக்கள் தங்களது சொந்த விளக்கத்தை அளித்து வருகின்றனர். அதே நேரத்தில், உஜ்ஜைனில் அமர்ந்திருக்கும் நிர்வாக அதிகாரிகள் எதுவும் சொல்ல மறுக்கிறார்கள்.
உண்மையில், புதன்கிழமை பெண்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட போது, மின்சாரம் தடை ஏற்பட்டது. இதன் காரணமாக இருட்டில் அறுவை சிகிச்சை தொடங்கியது. சுமார் ஒன்றரை மணி நேரமாக மின்சாரம் தடை செய்யப்பட்டதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதற்கிடையில் 5, 6 அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டன. மருத்துவமனை சார்பில் சோலார் விளக்குகள் மற்றும் ஜெனரேட்டர்கள் வழங்கப்படுவதும் உண்டு. ஆனால் அவை இரண்டும் வழங்கப்பட வில்லை என்பது வேதனையான விசியம் ஆகும்.
இந்த விஷயத்தை அம்பலப்படுத்திய பின்னர், ஜெனரேட்டர்கள் மற்றும் விருப்ப வசதிகள் உள்ளன என்றும், அதில் தான் நாங்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும் நாக்தா சி.எம்.ஓ கமல் சோலங்கி தெளிவு படுத்தினார். மேலும் ஒளிரும் விளக்கின் வெளிச்சத்தில் வெறும் ஊசி மட்டும் தான் போட்டும் எனவும் கூறியுள்ளார்.
அதே நேரத்தில், சுகாதாரத் துறையின் கவனக்குறைவான படங்கள் வெளிவந்த பிறகு, கமல்நாத் அரசாங்கத்தின் சுகாதார அமைச்சர் துளசி சிலாவத், இதுபோன்ற சிறிய சிறிய சம்பவங்கள் நடக்கக்கூடாது என்று கூறினார். இது வேதனையானது. இந்த குறைபாடுகளை சரிசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அலட்சியமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.