இலவச மின்சார இணைப்பு: நாடு முழுவதும் விவசாயிகள் மத்திய மற்றும் மாநில அரசிடமிருந்து பல வசதிகளைப் பெற்று வருகின்றனர். தற்போது விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க பீகார் மாநில அரசு முடிவு செய்துள்ளது. மாநிலத்தின் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கு இலவச இணைப்புகள் வழங்குவதாக பீகார் அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு சத் பூஜைக்கு முன்னதாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அரசு அறிவித்துள்ளபடி, 2026-ம் ஆண்டுக்குள் 4.80 லட்சம் புதிய விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்படும்.
இதற்காக சுமார் ரூ.2190.75 கோடி செலவிடப்படும் என்று பீகார் அரசு தெரிவித்துள்ளது. பீகார் அரசின் வேளாண் துறை வழங்கிய தகவலின்படி, 2023-24ம் ஆண்டில் சுமார் 50 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும். அதன் பிறகு, 2024-25 மற்றும் 2025-26 நிதியாண்டில்1.5-1.5 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன. இது தவிர, 2026-27ம் ஆண்டில் 1.80 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.
3.75 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்
இந்த மின் இணைப்புகள் முக்யமந்திரி க்ரிஷி வித்யுத் சம்பந்தன் யோஜனாவின் (Mukhyamantri Krishi Vidyut Sambandhan Yojana) என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன. இதுவரை, இந்தத் திட்டத்தின் கீழ் 3.75 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | விவசாயிகளுக்கு பம்பர் பரிசு! ரூ.15 லட்சம் தரும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கவில்லையா?
பாசனத்திற்கு தண்ணீர் வழங்க திட்டம்
ஆர்வமுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் சாகுபடிக்கு நீர் வழங்கும் திட்டம் உள்ளது. முதலமைச்சர் கிருஷி வித்யுத் சம்பந்தன் யோஜனா திட்டத்தின் இரண்டாம் கட்டத்திலும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்படும். எதிர்காலத்திலும் இந்த திட்டம் தொடர திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அனைத்து வசதிகளும் முக்யமந்திரி க்ரிஷி வித்யுத் சம்பந்தன் யோஜனா 2ன் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
விவசாயம் மேம்படும்
எரிசக்தி துறையிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, 2023-28 ஆம் ஆண்டிற்கான விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மின்சாரத்திற்காக ரூ.6190.75 கோடி மதிப்பிலான டிபிஆர் தயாரிக்கப்பட்டுள்ளது. இதனுடன் விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் மாநில அரசு பல திட்டங்களை வகுத்து வருகிறது.
மேலும் படிக்க | தீபாவளிக்கு விவசாயிகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் ஜாக்பாட் பரிசு கொடுக்கும் அரசு!
15 லட்சம் ரூபாய் நிதியுதவி
இந்தியா ஒரு விவசாய நாடு, ஆனால் இன்றும் விவசாயிகளுக்கு தேவையான உபகரணங்கள் சுலபமாக கிடைப்பதில்லை. விவசாயிகளுக்கு தேவையான வசதிகளை செய்துத் தருவதற்காக மத்திய அரசு பிரதமர் கிசான் எஃப்பிஓ திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
FPO அதாவது உழவர் உற்பத்தியாளர் அமைப்புக்கு விவசாயம் தொடர்பான தொழில் தொடங்க ரூ.15 லட்சம் நிதியுதவியை மத்திய அரசு வழங்கி வருவது குறிப்பிடத்தகக்து. PM Kisan FPO திட்டத்தின் பலன்களைப் பெற, விவசாயிகள் ஒரு அமைப்பு அல்லது நிறுவனத்தை (FPO) உருவாக்க வேண்டும், அதில் குறைந்தது 11 விவசாயிகள் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க | சோலார் மின்சார மானியம் கிடைக்க தாமதமாக காரணங்கள்! 40% சப்சிடி கொடுக்க அரசு தயார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ