விமான பயணிகளுக்கு Good News! ATF விலை குறைப்பால் விமான கட்டணம் மேலும் குறையும்

விமானப் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி. ATF என்னும் விமான எரிபொருள் விலை 12 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 1, 2022, 07:36 PM IST
  • விமானப் பயணிகளுக்கு ஒரு நல்ல செய்தி.
  • ஆகஸ்டு 1 முதல் விமான எரிபொருள் (ATF) விலை 12% குறைக்கப்பட்டுள்ளது.
  • ஜூலை 16 அன்று, ATF விலை 2.2 சதவீதம் குறைக்கப்பட்டது.
விமான பயணிகளுக்கு Good News! ATF விலை குறைப்பால் விமான கட்டணம் மேலும் குறையும் title=

விமானப் பயணிகளுக்கு ஓர் நற்செய்தி. விமானத்தில் பயணிக்கும் பயணிகள் விரைவில் அரசாங்கத்திடமிருந்து ஒரு நல்ல செய்தியைப் பெறுவார்கள். திங்களன்று நாட்டில் ATF என்னும் விமான எரிபொருள் விலை 12 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. வரும் நாட்களில் குறைந்த கட்டணத்தில் விமானப் பயணத்திற்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டணத்தை குறைப்பது தொடர்பாக விமான நிறுவனங்கள் எந்த நேரமும் அறிவிப்பைவெளியிடலாம் என எதிர்பர்க்கப்படுகிறது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் இந்த விலை குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வால், ஏடிஎஃப் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதற்குப் பிறகு, சர்வதேச விமானங்களை இயக்கும் உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கு எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களிடமிருந்து விமான எரிபொருளை அதாவது ATF (ஏவியேஷன் டர்பைன் எரிபொருள்) வாங்குவதற்கு 11 சதவீத அடிப்படை கலால் வரியிலிருந்து அரசாங்கம் நிவாரணம் வழங்கியது.

டெல்லியில் ATF விலையில் ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.16,232.36 அல்லது 11.75 சதவீதம் குறைந்து, இதன் விலை ஒரு கிலோ லிட்டர் ரூ.121,915.57 ஆக குறைந்துள்ளது. ஏடிஎஃப் விலை குறைக்கப்பட்ட பிறகு, விமானப் பயண கட்டணம் குறையும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதாவது, இப்போது ஏர்லைன்ஸ் நிறுவனம் கட்டணத்தை குறைப்பது குறித்து பரிசீலிக்கலாம்.

மேலும் படிக்க | ATF மீதான கலால் வரியில் இருந்து விலக்கு; சர்வதேச விமான டிக்கெட் விலை குறையும்

முன்னதாக ஜூலை 16ஆம் தேதி கிலோ லிட்டருக்கு ரூ.3,084.94 (2.2 சதவீதம்) குறைக்கப்பட்டது, இம்முறை இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், வணிக எரிவாயு சிலிண்டர்களும் மலிவானதாகிவிட்டன. 19 கிலோ எடை கொண்ட வணிக ரக எல்பிஜி சிலிண்டரின் விலை ரூ.36 குறைக்கப்பட்டு ரூ.1,976.50 ஆக உள்ளது. ஆனால் இதற்கிடையில், உள்நாட்டு எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை. தேசிய தலைநகரில் 14.2 கிலோ எடை கொண்ட உள்நாட்டு LPG சிலிண்டரின் விலை ரூ.1,053 என்ற அளவில் உள்ளது.

மேலும் படிக்க | சுமார் 900 இண்டிகோ விமானங்கள் தாமதம்; விளக்கம் கோரும் DGCA

மேலும் படிக்க | EPS அப்டேட்: இரட்டிப்பாகும் ஓய்வூதியம், ரூ. 15,000 வரம்பு அகற்றப்படும், விவரம் இதோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News