புதுடெல்லி: இந்தியா-வங்காளதேச எல்லையில் கால்நடைகள் மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force), இப்போது 60,000 க்கும் மேற்பட்ட மருத்துவ தாவரங்கள் மற்றும் 40 தேனீ பெட்டிகள் கொண்ட தடிமனான வேலி மூலம் எல்லையை பாதுக்காக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் இந்தியா-வங்காளதேச எல்லையில் அமைந்துள்ள மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள வேலி எல்லையை ஒட்டிய பகுதிகளில் இந்த இரண்டாவது தடுப்பு பாதுகாப்பு அமைப்பு உருவாக்கப்படுகிறது.
மத்திய அரசின் ‘Vibrant Village Programme’ என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ‘எல்லைப் பகுதியில் தேனீக்கள் வளர்ப்பு’ தொடங்கப்பட்டது. இதன் நோக்கம் எல்லைக்கு அப்பால் செயல்படும் குற்றங்களைத் தடுப்பது மட்டுமல்லாமல், தேனீ வளர்ப்பு மற்றும் தோட்டக்கலை மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதும் ஆகும்.
மக்களுக்கு வேலை வாய்ப்பு
இது தொடர்பாக ஆயுஷ் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், பூச்செடிகள் தேனீக்களால் மகரந்தச் சேர்க்கைக்கான சூழலை உருவாக்கும். "எல்லைக்கு அருகில் உள்ள இந்த பகுதிக்கு 'ஆரோக்யா பாதை' என்று பெயரிடப்பட்டு, பல்வேறு இடங்களில் 'கியூஆர் குறியீடுகள்' ஒட்டப்பட்டுள்ளன, ஸ்கேன் செய்யும் போது தாவரங்கள் பற்றிய தகவல்கள் தெரியவரும்" என்று கூறினார். இந்த 'பாதை' ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவும் மாறும்.
மேலும் படிக்க | உங்கள் பெற்றோருக்கான சிறந்த மருத்துவ காப்பீட்டை தேர்ந்தெடுக்க...!
முதல் கட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடியாவில் உள்ள கடிபூர் கிராம மக்கள் பழங்கள் மற்றும் நறுமணமுள்ள மருத்துவ தாவரங்களை நடவு செய்தல் மற்றும் தண்ணீர் பாய்ச்சுதல் மற்றும் வேலியை விரிவுபடுத்த குழிகளை தோண்டுதல் போன்ற பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியத்தின் (National Medicinal Plants Board (NMPB)) உதவியுடன் கடந்த இரண்டு மாதங்களில் உலோக வேலியின் தூண்களில் 40 தேனீ பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன என்று எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கால்நடைகள், போதைப் பொருட்கள், தங்கம், வெள்ளி மற்றும் பிற பொருட்களை கடத்திச் செல்வதற்காக வேலியை வெட்டவோ அல்லது உடைக்கவோ துணியும் எல்லை தாண்டிய குற்றவாளிகள் மற்றும் கடத்தல்காரர்களுக்கு தேனீக்கள் தடையாக செயல்படும் என்று BSF கருதுகிறது. மத்திய, மாநில அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் மற்றும் அதிகாரிகள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
துளசி, ஏகாங்கி, சத்முலி, அஸ்வகந்தா, கற்றாழை போன்ற செடிகள் வேலிப் பகுதியில் அமைக்கப்படும். இதுகுறித்து ஆயுஷ் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இப்பகுதிக்கு சுமார் 60,000 மரக்கன்றுகளை அனுப்பும் பணி என்எம்பிபி மற்றும் ஆயுஷ் அமைச்சகத்தால் நடந்து வருகிறது. இந்த முயற்சிக்கான முன்மொழிவைத் தயாரித்த BSF இன் 32 வது பட்டாலியனின் கட்டளை அதிகாரி (CO) சுஜித் குமார், இந்தத் திட்டத்தில் உள்ளூர் மக்கள் மற்றும் அதிகாரிகள் உற்சாகத்துடன் ஈடுபட்டு வருவதாகக் கூறினார்.
மேலும் படிக்க | Budget 2024: ஆயுஷ்மான் பாரத் பயனாளிகளுக்கு அட்டகாசமான செய்தி.. அதிகரிக்கிறதா கவரேஜ்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ