பெங்களூரில் கடந்த மாதம் சுட்டுக் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் தொடர்புடைய கொலையாளிகளின் ஓவியங்களை, கர்நாடக போலீஸ் சிறப்பு புலனாய்வு குழு இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ளது!
தங்களக்கு கிடைத்த தகவல்கள் மற்றும் CCTV காட்சிகளை கொண்டு இச்சித்திரங்கள் வரையப்பட்டுள்ளது.
#WATCH CCTV footage of one of the suspects in #GauriLankesh case. Police say, he was conducting recce before the murder. pic.twitter.com/6jfNJjMO5e
— ANI (@ANI) October 14, 2017
Based on info we made sketches, we want cooperation from ppl so releasing sketches of the suspects: Police SIT on #GauriLankesh pic.twitter.com/GwOuT8L565
— ANI (@ANI) October 14, 2017
தற்பொழுது மக்களின் பார்வைக்கு இந்த படங்களை காட்சிப்படுத்துவதன் மூலம் இவ்வழக்கில் குறிப்படத்தக்க முன்னேற்றம் கிடைக்கும் என கர்நாடக போலீஸ் சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.
கடந்த செப் 6-ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த, புகழ் பெற்ற எழுத்தாளர் பி.லங்கேஷ்-ன் மூத்த மகள் கவுரி லங்கேஷ், பெங்களூருவின் ராஜ ராஜேஸ்வரி நகரில் உள்ள அவரது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் கொலையாளிகள் தப்பியோடி விட்டனர்.
இந்த கொலை தொடர்பாக துப்பு தருபவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என கர்நாடகா உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி முன்னதாக அறிவித்திருந்தார்.