G20: பிரம்மாண்ட அறையில் சிறப்பு சைவ விருந்து... கொண்டாடப்பட்ட சிறுதானிய உணவுகள்!

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களால் நடத்தப்பட்ட, G20 ஜனாதிபதியின் விருந்து இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சாரத்தை கொண்டாடும் வகையில் சிறு தானிய உணவில்  சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 10, 2023, 10:49 AM IST
G20: பிரம்மாண்ட அறையில் சிறப்பு சைவ விருந்து... கொண்டாடப்பட்ட சிறுதானிய உணவுகள்! title=

புதுடெல்லி: G20 அமைப்பின் இந்தியா தலையின் கீழ் பல முக்கியமான விஷயங்களில் ஒருமித்த கருத்து எட்டப்பட்ட வெற்றிகரமான முதல் நாளில் முக்கியமான விவாதங்கள்  நடத்தப்பட்டு, பிரமாண்டமான,  அறுசுவையான இரவு விருந்தில் முடிந்தது.  G20 விருந்தினர்களுக்கான, பிரம்மாண்ட விருந்து, பாரத் மண்டபத்தில், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவால் வழங்கப்பட்டது. G20 மாநாட்டில், அளிக்கப்பட்ட விருந்தில் மொத்தம் 170 விருந்தினர்களுக்கு . இதில், பிரதிநிதிகளுக்கு பானிபூரி, சாட் போன்ற இந்தியாவின் மிக பிரபலமான தெருவோர உணவுகள் மற்றும் சிறுதானிய உணவுகள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டன. இது நம் நாட்டின் கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், 2023 ஆம் ஆண்டை இந்திய அரசு 'சிறுதானியங்களை' முன்னிலைப்படுத்தியது. சர்வதேச சிறு தானியங்கள் ஆண்டு' என அறிவிக்கப்பட்டுள்ளது. மெனு எப்படி இருந்தது மற்றும் இந்த விருந்தின் மற்ற சிறப்பம்சங்கள் என்ன என்று பாருங்கள்..

G20 இரவு விருந்தில் பரிமாறப்பட்ட உணவு மெனு

இந்திய குடியரசு தலைவர் அளித்த பிரம்மாண்ட G20 விருந்து, மிக முக்கியமாக நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிறந்த சைவ உணவுகள் இடம் பெற்றன. இதற்கான மெனுவில் இந்திய சுவைகளுடன் கூடிய உணவுகள் மற்றும் சிறுதானியங்களில் இருந்து செய்யப்பட்ட புதுமையான உணவுகள் பரிமாறப்பட்ட உள்ளன. இந்தியாவுக்கு வரும் உலக நாடுகளின் தலைவர்கள் யாரும் இந்த விருந்தை வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாதாக நினைக்கும் வகையில் தடபுடலாக, விரிவான விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறுதானியங்களால் செய்யப்பட்ட புலாவ், இட்லி ஆகியவை முக்கிய இடம்பெற்றது. மகாராஷ்டிராவின் மிக பிரபலமான தெரு உணவான பாவ் பாஜி மற்றும் தமிழ்நாட்டின் பணியாரம், பீகாரின் லிட்டி சோக்கா போன்ற  நாடு முழுவதும் உள்ள மிக  பிரபலமாக உள்ள தெரு உணவுகள் இடம்பெற்றது.

மேலும் படிக்க - ஜி20 மாநாட்டில் தலைவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகள்

விருந்தில், பல்வேறு இந்திய உணவுகளுடன் ஒரு சில சர்வதேச உணவுகளும் இருந்தன. பரிமாறப்படும் ஒவ்வொரு உணவின் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் முக்கியத்துவத்தை விளக்கும் ஒரு பகுதியும் மெனுவில் இருந்தது. ஜி20 விருந்து குறித்து பேசிய ஜி20 செயல்பாடுகளுக்கான சிறப்பு செயலாளர் முக்தேஷ் கே பர்தேஷி, இந்தியாவின் தெரு உணவுகளை உலக பிரநிதிகளிடம் கொண்டு செல்வதே ஒட்டு மொத்தமான குறிக்கோளாக இருந்தது என்றும், சிறுதானியங்கள் சார்ந்த உணவு வகைகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். அதேசமயம், பிரதிநிதிகள் இந்தியாவின் பல்வேறு பிராந்திய உணவு வகைகளையும் அனுபவிக்க வேண்டும் என்ற நோக்கில் விருந்திற்கான மெனு தயாரிக்கப்பட்டது என்றார். 

G20 குடியரசு தலைவர் அளித்த இரவு விருந்தில்  கலந்து கொண்ட விருந்தினர்கள்.

G20 ஜனாதிபதி விருந்தில் உலகத் தலைவர்கள், உள் நாட்டுத் தலைவர்கள் மற்றும் இந்திய அமைச்சர்கள் உட்பட 170 விருந்தினர்கள் கலந்து கொண்டனர். சமூக ஊடகங்களில் பரவி வரும் பல்வேறு புகைப்படங்களில், பிரதமர் நரேந்திர மோடி, இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பல உலக தலைவர்களுடன் இருப்பதைக் காணலாம்.  தமிழக அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட மாநில முதல் அமைச்சர்கள்  சிலர், அமைச்சர்கள் ஜெனரல் விகே சிங் மற்றும் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட இந்திய தலைவர்கள் இரவு விருந்தில் கலந்து கொண்டனர். பெரும்பாலான உலகத் தலைவர்கள் இந்திய அல்லது இந்தோ-மேற்கத்திய ஆடைகளில் இரவு விருந்தில் கலந்து கொண்டனர்.

முன்னாள் பிரதமர்களான டாக்டர். மன்மோகன் சிங் மற்றும் எச்.டி.தேவேகவுடா அழைக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் முதல்வர் மல்லிகார்ஜுன் கார்கே, கேபினட் அமைச்சரான ஜி20 விருந்து விருந்தினர் பட்டியலில் இடம் பெறவில்லை. முதல்வர்கள் நிதிஷ்குமார், ஹேமந்த் சோரன், மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான் ஆகியோர் இரவு விருந்தில் கலந்துகொள்வதை முன்னதாகவே உறுதி செய்தனர்.

மேலும் படிக்க | G20 Summit: செப்டம்பர் 9 -10 ஆகிய தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகள் விபரம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News