குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை; போக்குவரத்து சேவை பாதிப்பு..!

வியாழக்கிழமை (ஜனவரி 23) குடியரசு தின அணிவகுப்பின் முழு ஆடை ஒத்திகையை அடுத்து, திலக் பாலம் நிலையத்தில் காலை 10:30 மணி முதல் நண்பகல் வரை ரயில்களின் இயக்கம் மூடப்படும்.

Last Updated : Jan 23, 2020, 10:16 AM IST
குடியரசு தின விழா அணிவகுப்பு ஒத்திகை; போக்குவரத்து சேவை பாதிப்பு..! title=

டெல்லி: வியாழக்கிழமை (ஜனவரி 23) குடியரசு தின அணிவகுப்பின் முழு ஆடை ஒத்திகையை அடுத்து, திலக் பாலம் நிலையத்தில் காலை 10:30 மணி முதல் நண்பகல் வரை ரயில்களின் இயக்கம் மூடப்படும்.
முழு ஆடை ஒத்திகை காரணமாக சில ரயில்களை ரத்துசெய்து சில ரயில்களின் பாதைகளை திசை திருப்ப இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது.

வரும் 26 ஆம் தேதி குடியரசு தின விழா நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட உள்ளனர். இதனை முன்னிட்டு டெல்லியில் காவல்துறை, கடலோர காவல்படை, விமானப்படை, குதிரைப் படை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஒத்திகை அணிவகுப்பு  நடைபெறுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை (ஜனவரி 23) குடியரசு தின அணிவகுப்பின் முழு ஆடை ஒத்திகையை அடுத்து, திலக் பாலம் நிலையத்தில் காலை 10:30 மணி முதல் நண்பகல் வரை ரயில்களின் இயக்கம் ரத்து செய்யபட்டுள்ளது.

64423/64430 காஜியாபாத்-புது தில்லி-காஜியாபாத் ஈ.எம்.யூ வியாழக்கிழமை ரத்து செய்யப்படும், அதே நேரத்தில் 64434 டெல்லி-புதிய டெல்லி-காசியாபாத் EMU, 64012 சகுர்பஸ்தி-புது தில்லி-பல்வால் EMU, 12313 சீல்தா-புது தில்லி ராஜதானி எக்ஸ்பிரஸ், 64428 புது தில்லி- காசியாபாத் EMU, 64901 கோசி கலான்-காசியாபாத் EMU, 20817 மற்றும் 22811 புவனேஷ்வர்-புது தில்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் மற்றும் 20839 ராஞ்சி-புது தில்லி ராஜதானி எக்ஸ்பிரஸ் ஆகியவை திருப்பி விடப்பட்டுள்ளன. 11078 ஜம்மு தாவி-புனே ஜீலம் எக்ஸ்பிரஸ் மற்றும் 12626 புது தில்லி-திருவனந்தபுரம் கேரள எக்ஸ்பிரஸ் மற்றும் 14258 புது தில்லி-காஷி விஸ்வநாத் எக்ஸ்பிரஸ் ஆகியவை முழு ஆடை ஒத்திகை முடியும் வரை புது தில்லி ரயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.

இதை தொடர்ந்து,சென்னை மெரினாவில் காவல்துறை, கடலோர காவல்படை, விமானப்படை, குதிரைப் படை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஒத்திகை அணிவகுப்பு  நடத்தப்பட்டது. தேசியக் கொடியை ஆளுநர் ஏற்றுவது போன்ற ஒத்திகையின் போது, மரியாதை செலுத்தும் வகையில், மலர்தூவி விமானப்படை ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமிட்டன. மேலும், காவல்துறை சார்பில் வீரதீர சாகச ஒத்திகை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் பிற மாநிலத்தவரின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. ஒத்திகை நிகழ்ச்சியை ஒட்டி,  காமராஜர் சாலையில் சாந்தோம் சர்ச் முதல் போர் நினைவுச் சின்னம் வரை காலை 6 மணி முதல் 10 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. 

 

Trending News