ஹரியானா: ஹரியானா மாநிலம் குருகிராமில் டெங்குவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமிக்கு 15 நாள் சிகிச்சை செலவுக் கட்டணமாக ஃபோர்டிஸ் தனியார் மருத்துவமனை ரூபாய் 16 லட்சம் கட்டணம் வசூலித்த சம்பவம் பெரும் சர்சையினை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் துவர்கா நகரைச் சேர்ந்தவர் ஜெயந்த்சிங், அவரது 7 வயது மகள் ஆத்யாசிங் டெங்கு காய்ச்சல் காரணமாக முதலில் ராக்லேண்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர் குருகிராமில் உள்ள "Fortis Memorial Research Institute" என்ற தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அம்மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அச்சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை தொடங்கிய சில நாட்களிலேயே சிறுமிக்கு மூளையில் கடும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக எம்.ஆர்.ஐ. மூலம் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து சிறுமியை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போது, மருத்துவமனை நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்றும் சிறுமியின் தந்தை ஜெயந்த் சிங் தெரிவித்தார்.
கடந்த 17-ஆம் தேதி சிறுமி உயிரிழந்து விட்ட நிலையில், சிறுமியின் தந்தையிடம் 15 நாள் சிகிச்சை கட்டணமாக 16 லட்சம் ரூபாய்க்கான கட்டண ரசீதை மருத்துவமனை நிர்வாகம் கோரியுள்ளது. அதில் சிறுமி அணிந்திருந்த சிகிச்சை உடைக்கும் கட்டணம் குறிப்பிடப்பட்டிருந்தது வேதனை!
Please provide me details on hfwminister@gov.in .We will take all the necessary action. https://t.co/dq273L66cK
— Jagat Prakash Nadda (@JPNadda) November 20, 2017
இந்தக் கொடுமைகளைக் கண்ட ஜெயந்த் சிங்கின் நண்பர், மருத்துவமனையின் இரக்கமற்ற செயல் குறித்து டிவிட்டரில் தகவல் பதிவிட்டுள்ளார். இதனால் இந்த தகவல் காட்டுத் தீ போல் வேகமாக பரவியதில் சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளார்.