டெல்லி பனிமூட்டம்: விமான, ரயில் போக்குவரத்து பாதிப்பு.

Last Updated : Jan 9, 2017, 09:19 AM IST
டெல்லி பனிமூட்டம்: விமான, ரயில் போக்குவரத்து பாதிப்பு. title=

வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு விமான மற்றும் ரயில் போக்குவரத்து பாதிப்பு.

வட மாநிலங்களில் மற்றும் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடும் பனி மற்றும் மழை காரணத்தால் ஜம்மு காஷ்மீரில் அதிக அளவு குளிர் காணப்பட்டு வருகிறது.

டெல்லி நிலவும் கடும் பனிப்பொழிவால் ரயில் மற்றும் விமான போக்குவரத்து சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விமான மற்றும் ரயில்களின் பயண நேர மாற்றியமைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடும் பனிப்பொழிவால் 3 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது , 41 ரயில்கள் தாமதம் வரும் எனவும், 9 ரயில்களின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 6 சர்வதேச விமானங்களும், 7 உள்நாட்டு விமானங்களும் பனிப்பொழிவின் காரணமாக தாமதமாக வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News