புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் பி.சிதம்பரத்தின் 8 நாட்கள் சிபிஐ காவல் இன்றுடன் (ஆகஸ்ட் 30) நிறைவடைகிறது. இதனையடுத்து சிபிஐக்கு அமலாக்கத்துறை ஆவணங்களை ஒப்படைத்துள்ளது. அதில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அன்னிய நேரடி முதலீட்டில் விதிமுறைகளை மீறியுள்ளதாக எஃப்ஐபிபி (அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம்) கூறப்பட்டு உள்ளது.
128வது FIPB கூட்டத்தில் ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் அப்போதைய நிதியமைச்சர் பி.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரம் மற்றும் இது போன்ற பிற விவகாரங்களை தனித்தனியாக பரிசீலிக்க வேண்டும் என்று கூட்டத்தில் குறிப்பிட்டார்.
அமலாக்கத்துறை ஆவணங்களின்படி, FIPB கூட்டத்தில் ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு எப்படியாவது ஒப்புதல் வழங்கி விட வேண்டும் என உறுதியாக இருந்தார். அதனால் ஐ.என்.எக்ஸ் மீடியா ஒப்புதல் குறித்து பி.சிதம்பரம் எந்தவொரு கேள்வியையும் எழுப்பாமல் தனக்கும் தனது மகனுக்கும் நன்மை செய்வதற்காக அன்னிய நேரடி முதலீட்டை அங்கீகரித்தார்கள் என அமலாக்கத்துறை கூறியுள்ளது.
பி.சிதம்பரம் இன்று ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். 8 நாட்கள் சிபிஐ காவலில் இருந்த சிதம்பரம் அளித்த பதில்களில் சிபிஐ முழுமையாக திருப்தி அடையவில்லை. மேலும், விசாரணையின் போது ப.சிதம்பரம் கூறிய கருத்துக்களை மிக கவனமாக எடுத்த்துக்கொண்டு, அதை விசாரணையுடன் இணைக்க சிபிஐ விரும்புகிறது.