IDBI வங்கி தனியார் மயமாக்கல் குறித்து நிதியமைச்சகம் வழங்கிய முக்கிய தகவல்!

மத்திய அரசாங்கம் மற்றொரு வங்கியை தனியார்மயமாக்கப் போகிறது எனவும் தனியார்மயமாக்கலுக்கான நடவடிக்கைகள் மார்ச் மாதத்திற்குள் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்படுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 10, 2022, 11:29 PM IST
  • IDBI வங்கி தற்போது தனியார்மயமாக்கப்பட உள்ளது.
  • நாட்டில் வங்கி முறையை மேம்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
  • அரசாங்கம் மீண்டும் இன்னொரு வங்கியை தனியார்மயமாக்கப் போகிறது.
IDBI வங்கி தனியார் மயமாக்கல் குறித்து நிதியமைச்சகம் வழங்கிய முக்கிய தகவல்! title=

வங்கி தனியார்மயமாக்கல்: நாட்டில் வங்கி முறையை மேம்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசாங்கம் மீண்டும் இன்னொரு வங்கியை தனியார்மயமாக்கப் போகிறது. ஐடிபிஐ வங்கியை தனியார்மயமாக்குவதற்கான ஏல நடவடிக்கைகள் மார்ச் மாதத்திற்குள் தொடங்கப்படும் என கூறப்படுகிறது. அதே சமயம், அடுத்த நிதியாண்டில் அதை விற்பனை செய்யும் செயல்முறையை மேற்கொள்ளலாம். இந்த தகவலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 1964ஆம் ஆண்டு தொழிற்துறைக்கு கடன் மற்றும் இதர உதவிகள் அளிக்கும் வகையில் IDBI வங்கி உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் வங்கி தற்போது தனியார்மயமாக்கப்பட உள்ளது.

ஐடிபிஐ வங்கியில் உள்ள அரசின் பங்குகளை விற்பதன் மூலம் வங்கியை தனியார்மயமாக்கும் நோக்கில்,  வங்கியை வாங்க ஆர்வம் கொண்ட முதலீட்டாளர்கள் வாங்குவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்தும் ஆவணத்தை (EoI) சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி டிசம்பர் 16, 2022 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

IDBI வங்கி பங்குகள் மத்திய அரசு மற்றும் ஆயுள் காப்பீடு கழகத்திடம் (LIC) அதிகமாக உள்ளன. அந்த வகையில் LIC 49.24 சதவீத பங்குகளையும், மத்திய அரசு 45.48 சதவீத பங்குகளையும் வைத்துள்ளன. இந்த நிலையில் LIC வசமுள்ள பங்குகள் விற்பனை செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களின் அகவிலைப்படி 38%லிருந்து 41% ஆக உயர வாய்ப்பா?

வங்கியை வாங்க விண்ணப்பிக்கும் முதலீட்டாளர்களுக்கு, குறைந்தபட்ச நிகர மதிப்பு ரூ.22,500 கோடியாக இருக்க வேண்டும். ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) தற்போது ஐடிபிஐ வங்கியில் 529.41 கோடி பங்குகளுடன் 49.24 சதவீதப் பங்குகளையும், மத்திய அரசு 488.99 கோடி பங்குகளுடன் 45.48 சதவீதப் பங்குகளையும் வைத்திருக்கிறது.

பங்கு விற்பனைக்குப் பிறகு, வங்கியில் எல்ஐசி மற்றும் அரசாங்கத்தின் ஒருங்கிணைந்த பங்கு 94.72 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாகக் குறையும். இந்த வங்கியில் அரசு தனது 30.48 சதவீத பங்குகளையும், எல்ஐசி 30.24 சதவீத பங்குகளையும் விற்கும். குறிப்பிடத்தக்க வகையில், 2022-23 நிதியாண்டில் பங்கு விலக்கல் மூலம் ரூ.65,000 கோடி திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது, அதில் ஏற்கனவே ரூ.24,544 கோடியை திரட்டியுள்ளது. 

மேலும் படிக்க | 7th Pay Commission: மீண்டும் அதிகரிக்கிறது அகவிலைப்படி, டிஏ 41% ஆக உயரும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News