கடந்த சுமார் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் உலக மக்களை பாடாய் படுத்தி வருகின்றது. மிக தீவிரமான தொற்று நிலையை எதிர்கொண்டு, பல இழப்புகளை சதித்து உலக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில், உலக அளவில் ஆங்காங்கே கோவிட் 19 நோய்த்தொற்று மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. அதுவும் இந்தியாவில் இது சற்று தீவுரமாகவே அதிகரித்து வருகின்றது.
கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் பதிவாகும் தொற்று எண்ணிக்கையின் அளவு சீராக அதிகரித்து வருகிறது. இது மக்களையும் அதிகாரிகளையும் மீண்டும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு முந்தைய கொரோனா அலை மக்களை கடுமையாக பாதித்தது. தற்போது எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாவதால், இது அடுத்த அலையின் ஆரம்பமோ என மக்கள் பீதியில் உள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,109 பேர் புதிதாக கோவிட் 19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 49,622 ஆக உள்ளதாகவும் சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக வியாழன் அன்று 10,000 புதிய கோவிட் தொற்று எண்ணிக்கை என்ற கவலைக்குரிய குறி தாண்டப்பட்டது. சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, கடந்த வாரத்தில் இந்தியாவில் தினமும் சராசரியாக 5,555 பேர் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய வாரத்தில் 3,108 ஆக இருந்தது.
மேலும் படிக்க | டெல்லி மக்களே உஷார்! கிடுகிடுவென உயரும் கொரோனா சில வாரங்களில் உச்சத்தை எட்டும்
வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, தேசிய தலைநகர் டெல்லியில், புதிதாக 1527 பேர் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்பட்டதாகவும் இரண்டு பேர் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக 1,000 க்கும் மேற்பட்டோர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,086 புதிய தொற்றுகள் மற்றும் ஒரு இறப்பு பதிவாகியுள்ளது.
அதிகரித்து வரும் எண்ணிக்கைக்கு மத்தியில் உத்தர பிரதேசத்தில் நொய்டா நகரில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையின் உத்தரவில், மக்கள் கட்டாயமாக முகக்கவசங்களை அணிய வேண்டும் என்றும், அது இல்லாமல் பொது இடங்களில் இருப்பவர்கள் அலுவலகம், மருத்துவமனைகள், பள்ளிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள் மற்றும் எந்தவொரு பொதுப் போக்குவரத்திலும் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | இந்தியாவில் அடுத்த 10 நாட்களுக்கு கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும்... ஆனால்...!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ