நான்கு நாள் சுற்றுப்பயணமாக மத்திய ஆசிய நாடுகளுக்கு செல்கிறார் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ்!
அரசு முறை பயணமான மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள்.
இன்று டெல்லியில் இருந்து புறப்பட்ட அவர் ஆக., 2-3 ஆகிய தேதிகளில் கஜகஸ்தானுக்கும், ஆக., 3-4 ஆகிய தேதிகளில் கிர்கிஸ்தான் மற்றும் ஆக., 4-5 ஆகிய தேதிகளில் உஸ்பெகிஸ்தான் சென்று நாடு திரும்பவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணத்தில் அஸ்டானா செல்லும் சுஷ்மார, கெய்ராத் அப்தக்ஷ்மனோவுடன் ஒரு இருதரப்பு சந்திப்பை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கஜகஸ்தானில் உள்ள இந்திய சமூக மையத்துடன் இணைந்து செயல்பட அந்நாட்டின் தலைமையை அழைப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Delhi: External Affairs Minister Sushma Swaraj leaves for three nation tour of Kazakhstan, Kyrgyzstan & Uzbekistan pic.twitter.com/KyWNuUSkB1
— ANI (@ANI) August 2, 2018
இந்தியா மற்றும் கஜகஸ்தான் நாடுகள் நெருக்கமான மூலோபாய பங்காளித்தனத்தையும், பலமுகமான உறவுகளையும் கொண்டிருக்கின்றன. அணுசக்தி அணு உலைகளுக்கு இந்தியா, யுரேனியத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றான மத்திய ஆசிய நாடு கஜகஸ்தான் என்பது குறிப்பிடத்தக்ககது.
இந்நிலையில் கஜகஸ்தானில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள சுஷ்மா இருநாட்டு உறவுமுறைகளை வலுபடுத்துவதற்கான சந்திப்பினை மேற்கொள்ளவார் எனவும் தெரிகிறது!