ஒவ்வொரு குழந்தையும் தனது தாய்மொழியில் மட்டுமே படிக்க வேண்டும் -நாயுடு!

இந்த நாட்களில் நாட்டில் வரலாறு பற்றி ஒரு மிகப்பெரிய விவாதம் நடைப்பெற்று வருகிறது. இந்திய வரலாற்றை மீண்டும் எழுதுவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய பின்னர் விவாதம் ஒரு புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. 

Last Updated : Oct 23, 2019, 10:45 AM IST
  • வரலாற்றின் நிகழ்வுகளை ஆங்கில வரலாற்றாசிரியர்கள் தங்களுக்கு ஏற்ப எழுதியுள்ளனர்..
  • இந்திய சூழல்கள் மற்றும் மதிப்புகளுடன் வரலாற்றை மீண்டும் எழுத வேண்டிய அவசியம் உள்ளது..
ஒவ்வொரு குழந்தையும் தனது தாய்மொழியில் மட்டுமே படிக்க வேண்டும் -நாயுடு! title=

இந்த நாட்களில் நாட்டில் வரலாறு பற்றி ஒரு மிகப்பெரிய விவாதம் நடைப்பெற்று வருகிறது. இந்திய வரலாற்றை மீண்டும் எழுதுவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய பின்னர் விவாதம் ஒரு புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. 

இந்நிலையில் தற்போது துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடுவும் இந்த விவாதத்தில் இணைந்துள்ளார். டெல்லியில் உள்ள தமிழ் மாணவர் சங்க மாணவர்களுடன் உரையாற்றிய நாயுடு, வரலாற்றின் நிகழ்வுகளை ஆங்கில வரலாற்றாசிரியர்கள் தங்களுக்கு ஏற்ப எழுதியுள்ளனர் என்று கூறினார். 1857 புரட்சியை சுதந்திரத்திற்கான முதல் போராட்டமாக அவர்கள் ஒருபோதும் கருதவில்லை. இந்திய சூழல்கள் மற்றும் மதிப்புகளுடன் வரலாற்றை மீண்டும் எழுத வேண்டிய அவசியம் உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
 
இந்த சந்தர்ப்பத்தில், துணை ஜனாதிபதி நாயுடு வரலாற்றாசிரியர்களை இந்திய சூழல்-மதிப்புகளுக்கு ஏற்ப புதிதாக எழுதுமாறு அழைப்பு விடுத்தார். பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் 1857-ஆம் ஆண்டில் ஒரு 'சிப்பாய் கிளர்ச்சியை' மட்டுமே எழுதியுள்ளனர் என்றும் அவர் கூறினார். 

இந்தியாவின் பிரிட்டிஷ் சுரண்டல் அவர்களின் நலன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றும், வரலாறு அவர்களுக்கு ஒரு பயனுள்ள கருவியாக மாறியது என்றும் நாயுடு குறிப்பிட்டு பேசியுள்ளார். நாட்டின் கல்வி முறை இந்திய கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் பிரதிபலிக்க வேண்டும். நம் நாட்டில், 19 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொழிகள் தாய்மொழியாகப் பேசப்படுகின்றன.

இந்த வளமான மொழி பாரம்பரியத்தை நாம் காப்பாற்ற வேண்டும். இந்தியா ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட நாடு, பல மொழிகள் இருக்கும் இடத்தில் நாம் பெருமைக்கொள்ள வேண்டும் என்றும் துணை ஜனாதிபதி கூறினார். ஒவ்வொரு குழந்தையும் தனது தாய்மொழியில் மட்டுமே படிக்க வேண்டும். இது குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்துவதோடு மொழிகளையும் பாதுகாக்கும் என்று நாயுடு குறிப்பிட்டுள்ளார். 

மேலும் மாணவரகள், படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் மற்றும் நாடு எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் ஆர்வம் காட்டி தீர்வு காண வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Trending News