ED -யின் அடுத்த பிடி: கேரள முதல்வர் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

Enforcement Directorate: கடந்த மாதம், கர்நாடக உயர் நீதிமன்றம், எஸ்எஃப்ஐஓ நடத்திய விசாரணையை எதிர்த்து எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 27, 2024, 05:42 PM IST
  • கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் மற்றும் அவரது ஐடி நிறுவனம் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு.
  • தீவிர மோசடி விசாரணை அலுவலகத்தின் விசாரணைக்கு எதிராக எக்ஸாலாஜிக் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
  • கடந்த மாதம், நீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்தது.
ED -யின் அடுத்த பிடி: கேரள முதல்வர் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு title=

கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் (Veena Vijayan) மற்றும் அவரது ஐடி நிறுவனம் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் அமலாக்க இயக்குனரகம் வழக்குப்பதிவு செய்துள்ளது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான அமலாக்க இயக்குனரகத்தின் நடவடிக்கைகள் தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், அமலாக்க இயக்குனரகத்தின் அடுத்த பெரிய நடவடிக்கையாக இது வெளிவந்துள்ளது. சர்ச்சைக்குரிய ஒரு சுரங்க நிறுவனம் மற்றும் கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணாவின் ஐடி நிறுவனத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்குரிய நிதி பரிவர்த்தனைகள் குறித்து மத்திய ஏஜென்சியான அமலாக்க இயக்குனரகம் (Enforcement Directorate) தனது விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

PMLA -இன் கீழ் வழக்கு

அமலாக்க இயக்குனரகம், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர்களுக்கு சம்மன் அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தீவிர மோசடி விசாரணை அலுவலகம் (SFIO), ஏற்கனவே சட்டவிரோத உதவித்தொகையை உள்ளடக்கியதாக சந்தேகிக்கப்படும் பரிவர்த்தனைகளை விசாரித்து வருகிறது. இந்த பரிவர்த்தனைகள் சுரங்க நிறுவனத்திற்கு,  குறிப்பாக ஆலப்புழா மற்றும் கொல்லம் கடலோரப் பகுதிகளில் தாது மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்கு கேரள அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உதவிகளுக்கு ஈடாக வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

வருமான வரித்துறை நடத்திய விசாரணையில், கொச்சி மினரல்ஸ் அண்ட் ரூட்டில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) என்ற தனியார் நிறுவனம் 2018 மற்றும் 2019 க்கு இடையில் வீணாவின் நிறுவனமான எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸுக்கு ரூ. 1.72 கோடியை முறைகேடாக மாற்றியதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த காலத்தில் CMRL க்கு அந்த ஐடி நிறுவனம் எந்த சேவையையும் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க | ED காவலில் இருக்கும் கெஜ்ரிவாலின் உடல்நிலை மோசமடைந்தது.. ஆபத்தான நிலையில் சர்க்கரை அளவு

கடந்த மாதம், கர்நாடக உயர் நீதிமன்றம், எஸ்எஃப்ஐஓ நடத்திய விசாரணையை எதிர்த்து எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது.

முன்னதாக, தீவிர மோசடி விசாரணை அலுவலகத்தின் விசாரணைக்கு எதிராக எக்ஸாலாஜிக் (Exalogic) கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. கடந்த மாதம், இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், "அத்தகைய பணிக்காக மத்திய அரசின் கைகளை கட்டிப்போட முடியாது" என்று கூறியது.

ஜனவரி மாதம் கேரள சட்டசபையில் இது குறித்து பேசிய முதல்வர் பினராயி விஜயன் (Pinarayi Vijayan), தனது மனைவியின் ஓய்வூதிய நிதியைப் பயன்படுத்தி தனது மகள் நிறுவனத்தைத் தொடங்கினார் என்றும், தன் மீதும், தன் குடும்பத்தினர் மீதும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் கூறியிருந்தார்.

மேலும் படிக்க | சிறையில் இருந்து அரசாங்கத்தை நடத்த முடியாது.. கெஜ்ரிவாலுக்கு ஆளுநர் செக்.. அடுத்து என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News