தேர்தல் பிரச்சார ரொக்க பரிவர்த்தனை ₹ 10 ஆயிரமாக குறைப்பு: EC

வேட்பாளரின் ரொக்க பரிவர்த்தனை வரம்பு ₹ 10 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமாக பணப்பரிமாற்றம் செய்யக்கூடாது தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.....

Last Updated : Nov 26, 2018, 10:34 AM IST
தேர்தல் பிரச்சார ரொக்க பரிவர்த்தனை ₹ 10 ஆயிரமாக குறைப்பு: EC title=

வேட்பாளரின் ரொக்க பரிவர்த்தனை வரம்பு ₹ 10 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமாக பணப்பரிமாற்றம் செய்யக்கூடாது தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.....

தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் நடத்தும் நோக்கில், பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த தேர்தல் ஆணையம் பல திட்டங்களை நடைமுறைபடுத்தி வருகிறது. இந்நிலையில், வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார செலவுக்கான ரொக்க பரிவர்த்தனையை நாளொன்றுக்கு 20 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாக தேர்தல் ஆணையம் குறைத்துள்ளது.

தேர்தல் நடைபெறும் 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது. அதன்படி வேட்பாளர் ஒருவர் ரொக்கமாக ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே கடனாகவோ நன்கொடையாகவோ தனிநபர் அல்லது நிறுவனத்திடம் இருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

10 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனை என்றால் காசோலை, வரைவோலை அல்லது ஆன்லைன் வாயிலாக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வங்கி கணக்கு மூலம் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த புதிய விதிமுறைகள் நவம்பர் 12 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவுகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் அதிகபட்சமாக வேட்பாளரின் செலவு உச்சவரம்பு 28 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

Trending News