தேர்தல் விதிமுறை மீறல்: ராஜீவ் குமாருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

தேர்தல் விதிமுறை மீறியதாக நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜீவ் குமாருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது!!

Last Updated : Mar 27, 2019, 01:07 PM IST
தேர்தல் விதிமுறை மீறல்: ராஜீவ் குமாருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் title=

தேர்தல் விதிமுறை மீறியதாக நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜீவ் குமாருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது!!

2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், மாத வருமானம் ரூ.12,000-க்கு குறைவாக உள்ள 20% (5 கோடி) ஏழை குடும்பங்களுக்கு மாதம் ரூ.6,000 வீதம் ஆண்டுதோறும் தலா 72 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன்மூலம் நாட்டில் உள்ள 25 கோடி மக்கள் பயன்பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராகுல் காந்தி அறிவித்த இந்த திட்டம் குறித்து நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் ராஜீவ் குமார், 'இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது. அவ்வாறு ஒருவேளை செயல்படுத்தினால் நாட்டில் நிதி பற்றாக்குறை ஏற்படும். பொருளதாரத்தை சீர்குலைக்க வைக்கும்" என்று தெரிவித்திருந்தார். 

இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி, காங்கிரஸின் திட்டம் குறித்து கருத்து தெரிவித்ததால் அடுத்த 2 நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி, ராஜீவ் குமாருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

 

Trending News