Corona இரண்டாம் அலை: ICSE வாரியம் 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து

ஐசிஎஸ்இ (ICSE ), ஐஎஸ்சி (ISC) நடத்தும்10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக CISCE எனப்படும் இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் சென்ற வாரம் அறிவித்தது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 20, 2021, 10:35 AM IST
  • தேசிய அளவில் தொடர்ந்து, ஒரே நாளில் 2.5 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பதிவகியுள்ளது.
  • முடிவுகள் அறிவிக்கப்படும் தேதிகள் குறித்தும் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் CISCE தெரிவித்துள்ளது.
  • 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது
Corona இரண்டாம் அலை: ICSE வாரியம் 10ம் வகுப்பு தேர்வுகள் ரத்து title=

ஐசிஎஸ்இ (ICSE ), ஐஎஸ்சி (ISC) நடத்தும்10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக CISCE எனப்படும் இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் சென்ற வாரம் அறிவித்தது.

இது தொடர்பாக, ஜூன் மாதம் முதல் வாரத்தில் தேர்வுகள் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. CISCE வாரியத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வு மே 5-ம் தேதி தொடங்குவதாக இருந்தது. 

இந்நிலையில், ICSE வாரியம் 10ம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்துள்ளது. எனினும், முண்ட்தைய அறிவிப்பின் படி, 12ம் வகுப்பு தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தது.

எந்த அடிப்படையில் மாணவர்கள் தேர்ச்சி அறிவிக்கப்படும் என்பது குறித்தும், முடிவுகள் அறிவிக்கப்படும் தேதிகள் குறித்தும் பின்னர் அறிவிக்கப்படும் எனவும்  CISCE தெரிவித்துள்ளது.

ALSO READ | கொரோனா 2வது அலை: ICSC, ISC நடத்தும்10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு

 முன்னதாக, CBSE 10 ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்வதாகவும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைப்பதாகவும் மத்திய கல்வி அமைச்சகம் ஒரு வார காலத்திற்கு முன்பாக அறிவித்தது. ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலைமை மதிப்பாய்வு செய்யப்பட்டு பின்னர் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

நாடு முழுவதிலும், கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தொடங்கி, தொற்று பாதிப்புகள் மிக வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, தில்லி, கேரளா, தமிழகம் உள்ளிட்ட சில இடங்களில் கொரோனா பரவல் அதிகம் உள்ளது. 

இதுவரை இல்லாத அளவிற்கு தேசிய அளவில் தொடர்ந்து, ஒரே நாளில் 2.5 லட்சத்திற்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது பதிவகியுள்ளது. 

ALSO READ | COVID-19: கேரளாவில் உலக புகழ் பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவிற்கு கட்டுப்பாடுகள்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News