புதுடெல்லி: மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் வழக்கில் தொடங்கிய போதைப்பொருள் மோசடி தொடர்பான விசாரணை நாள்தோறும் புதிய கோணத்தை எடுத்து வருகிறது. போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு (Narcotics Control Bureau (NCB)) குழு அலுவலகத்தில் தீபிகா படுகோன், சாரா அலி கான் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர்.
தீபிகா படுகோனிடம் விசாரணை முடிவடைந்தது. நடிகைகள் சாரா அலி கான் மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோரிடம் சுமார் 5 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
போதை மருந்து தொடர்பாக நடிகைகளிடம் கேட்கப்பட்ட கேள்விகள் என்ன தெரியுமா?
இந்த விசாரணையில், பவானா ஏரியில் பார்ட்டி நடைபெற்றதாக கூறப்படுவது உட்பட பல கேள்விகளை NCB கேட்டது. 'கேதார்நாத்' திரைப்படத்திற்குப் பிறகு, சுஷாந்துடன் விடுமுறையை கழித்தது தொடர்பாக சாரா அலிகானிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இன்று, ஷ்ரத்தா ஐந்தரை மணி நேரமும், சாராவை நான்கரை மணி நேரமும் விசாரிக்கப்பட்ட்னர். 'சிச்சோர்' திரைப்பட வெற்றி மற்றும் புனேவில் படப்பிடிப்பு முடிந்ததும் ஹேங்கவுட் வில்லாவில் நடைபெற்ற ஒரு பார்ட்டியில் கலந்துக் கொண்டது குறித்தும் ஷ்ரத்தாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.
மூன்று நாட்களில் அறிக்கை
இதுவரை நடந்த விசாரணை தொடர்பான அறிக்கை அடுத்த 3 நாட்களில் டி.ஜி.க்கு அனுப்பப்படும். மும்பை மண்டல அதிகாரிகள் தங்களது தனி அறிக்கையை சமர்ப்பிப்பார்கள். டெல்லி எஸ்ஐடி குழு தங்கள் அறிக்கையை சமர்ப்பிக்கும்.
'என்.சி.பியில் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின் விரிவான அறிக்கை என்.சி.பியின் டி.ஜி. ராகேஷ் அஸ்தானாவுக்கு அனுப்பப்படும், அதன் பின்னரே மேலதிக விசாரணை மேற்கொள்ளப்படும்' என்று என்.சி.பி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Also Read | சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு: ரியா சக்ரவர்த்தியிடம் அமலாக்கத்துறை இன்று விசாரணை