ஆதார் அட்டையுடன் ஓட்டுனர் உரிமம் விரைவில் இணைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்கங்களைக் கொண்ட ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அது வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, ஓய்வூதியம், சமூக நல திட்டங்கள், செல்போன் சேவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் கியாஸ் மானியம் ஆகியவற்றுக்கு ஆதார் அடையாள எண் கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது.
சமீபத்தில் தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தில் மருத்துவக் காப்பீடு பெறுவதற்கு ஆதார் கட்டாயமில்லை என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. மேலும், பள்ளிமாணவர்களின் சேர்க்கைக்கு ஆதார் என கட்டாயம் இல்லை என ஆதார் ஆணையம் சமீபத்தில் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், எந்த ஒரு தனிநபர் குறித்த விவரங்களையும் தெரிந்து கொள்வதற்கு ஆதார் எண் சமூக ரீதியான மிகப் பெரிய மாறுதலை ஏற்படுத்தியிருப்பதாக அமைச்சர் தெரிவித்த, மத்திய அரசுத்துறை மந்திரி ரவி ஷங்கர் பிரசாத் நேற்று (சனிக்கிழமை) ஆதார் அட்டையை விரைவில் ஓட்டுனர் உரிமத்துடன் இணைக்க திட்டமிட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.
மேலும், அவர் தொடர்ந்து பேசுகையில், "பாராளுமன்றத்தில் இந்த மசோதா நிலுவையில் உள்ளது. ஆதார் அட்டையுடன் வாகனர் ஓட்டுனர் உரிமம் இணைக்கப்பட உள்ளதாகவும் இதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும் பிரசாத் கூறினார்.
"ஒரு குடிகார நபர் நான்கு நபர்களைக் கொன்றார் மற்றும் பஞ்சாபியிலிருந்து வேறு எந்த மாநிலத்திற்கும் வேறுபட்ட அடையாளங்களைப் பயன்படுத்தி விநியோகிக்கப்பட்ட உரிமம் பெறும் உரிமையைப் பெற்றுக் கொண்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆதாரை இணைத்த பிறகு, பெயரை மாற்ற முடியும், ஆனால் உயிரியளவுகள் மாற்ற முடியாது. குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிர்ப்பலியை ஏற்படுத்திவிட்டு, வேறு மாநிலத்தில் உரிமம் பெறுவது போன்ற குற்றங்களை இது தடுக்கும் என்றும் அவர் விளக்கினார்.