மாநிலங்களவை தேர்தலில் வெற்றிக்கு தேவையான ஆதரவு உள்ளது: டாக்டர் சுபாஷ் சந்திரா

மாநிலங்களவை தேர்தலில் வெற்றிக்கு தேவையான ஆதரவு உள்ளதாக உறுதி கூறும் Essel குழுமத் தலைவரும் சுயேச்சை வேட்பாளருமான டாக்டர் சுபாஷ் சந்திரா

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 7, 2022, 10:10 PM IST
  • மாநிலங்களவை தேர்தல் ஜூன் 10-ம் தேதி நடைபெற உள்ளது.
  • வாக்கு எண்ணிக்கை ஜூன் 10 அன்று நடைபெறும்
  • எஸ்ஸெல் குழும நிறுவனர் டாக்டர் சுபாஷ் சந்திரா ராஜஸ்தானில் இருந்து சுயேட்சையாக போட்டி
மாநிலங்களவை தேர்தலில் வெற்றிக்கு தேவையான ஆதரவு உள்ளது: டாக்டர் சுபாஷ் சந்திரா title=

ஜெய்ப்பூர்: மாநிலங்களவை தேர்தலை முன்னிட்டு, ராஜஸ்தான் மாநிலத்தில் அரசியல் களம் தீவிரமடைந்துள்ளது. பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் ஆகிய தேசியக் கட்சிகலைத் தவிர, சுயேட்சை வேட்பாளர்கள், தங்களின் வியூகத்தை வகுப்பதில் மும்முரமாக உள்ளனர்.

இந்நிலையில், இன்று தற்போதைய சுயேட்சை வேட்பாளர் டாக்டர் சுபாஷ் சந்திரா செய்தியாளர்களை சந்தித்தார். Essel குழுமத் தலைவரும் சுயேச்சை வேட்பாளருமான டாக்டர் சுபாஷ் சந்திரா, வெற்றிக்கு தேவையான ஆதரவு தன்னிடம் உள்ளதாக தெரிவித்தார். 

பாரதிய ஜனதா கட்சி  எம்.எல்.ஏக்களைத் தவிர 9 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. வெற்றிக்குத் தேவையான ஆதரவைப் பெறுவது கடினம் அல்ல. தேர்தலில் வெற்றி பெறுவேன் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது என்று டாக்டர் சுபாஷ் சந்திரா தெரிவித்தார்.

நாகௌர் எம்பி ஹனுமான் பெனிவாலின் ஆதரவு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த டாக்டர் சுபாஷ் சந்திரா, எம்பி ஹனுமான் பெனிவால் மற்றும் அவரது கட்சியினரின் வெளிப்படையான ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் படிக்க | Essel குழுமத் தலைவர் டாக்டர் சுபாஷ் சந்திரா பாஜக சார்பில் வேட்புமனு தாக்கல்

தன்னை சுயேச்சை வேட்பாளராக ஆதரிக்க முடிவு செய்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய டாக்டர் சுபாஷ் சந்திரா, ஹனுமான் பெனிவாலுடன் பல்வேறு வளர்ச்சிப் பிரச்னைகள் குறித்து கலந்தாலோசனை நடத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

தனது முன்னோர்களின் நிலம் ராஜஸ்தான் என்று கூறிய , புலம்பெயர்ந்த ராஜஸ்தானியர்கள் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளிலும் தான் எப்போதும் பங்கேற்பதாக தெரிவித்த அவர், மாநிலங்களவையில் ராஜஸ்தான் மாநில பிரச்னைகளை முக்கியமாக எழுப்புவதாகவும், தனது மூதாதையரின் நிலமான ராஜஸ்தானுக்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றும் டாக்டர் சுபாஷ் சந்திரா தெரிவித்தார்.  

dr-subash-chandra
சில அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மாறி வாக்களிக்கலாம்  
வெற்றிக்கு தேவையான தரவுகளை சேகரிப்பது கடினம் அல்ல. ஏனென்றால் சுயேச்சைகள் மற்றும் பிற கட்சிகளின் முழு ஆதரவு தனக்கு உள்ளது என்று கூறிய டாக்டர் சுபாஷ் சந்திரா, மாநில அரசாங்கத்தின் சில அதிருப்தி எம்எல்ஏக்களும் மாறி வாக்களிக்கலாம் என்றும் தெரிவித்தார். 

மேலும் படிக்க | முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை

சச்சின் பைலட்டுக்கு வாய்ப்பு - டாக்டர் சுபாஷ் சந்திரா

சச்சின் பைலட்டின் தந்தையுடன் தனக்கு நல்ல நட்பு உண்டு என்று கூறிய மாநிலங்களவை சுயேட்சை வேட்பாளர் டாக்டர் சுபாஷ் சந்திரா, சச்சின் பைலட்டுக்கு இது ஒரு வாய்ப்பு என்றும் கூறினார். அவர் கடின உழைப்பாளி. இங்கு அவருக்கு ஒரு பெரிய வாய்ப்பு வந்துள்ளது. இந்த வாய்ப்பை இன்று தவறவிட்டால் 2028 வரை முதல்வராகும் வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தார்.

ஊடக நிறுவனம் தேர்தலில் பயன்படுத்தப்படவில்லை- டாக்டர் சுபாஷ் சந்திரா
எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குக்வது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த டாக்டர் சுபாஷ் சந்திரா, பயந்தவர்களே அந்த வேலையை செய்வார்கள் என்றும், தான், தனது ஊடக நிறுவனத்தை தேர்தலில் பயன்படுத்தியதில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க | தென் இந்தியாவில் அடி எடுத்து வைத்தது Zee Media: 4 மொழிகளில் செய்தி சேனல்கள்

ஹரியானா மாநிலத்தில் இருந்து 6 ஆண்டுகளாக மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினேன். அந்த மாநிலத்திற்க்கு நான் என்ன வேலை செய்தேன் என்பது அங்குள்ள மக்களுக்கு தெரியும் என்றும் மாநிலங்களவை எம்.பி டாக்டர் சுபாஷ் சந்திரா தெரிவித்தார்.

மேலும், ஹரியானா எம்.எல்.ஏ.க்கள் தனது வெற்றியை விரும்பியதால் அங்கு எம்.பியாக இருந்தேன், அதேபோல, ராஜஸ்தான் எம்எல்ஏக்களும் விரும்பினால் வெற்றி என்னுடையது என்று தெரிவித்தார்.

யாரையும் விடுதியிலோ அல்லது வேறு இடத்திலோ அடைக்கவில்லை. ஏனென்றால் எனக்கு எந்த வித பயமும் இல்லை என்று செய்தியாளர்களிடம் தெரிவித்த டாக்டர் சுபாஷ் சந்திரா, ராஜஸ்தானில் 2023 சட்டசபை தேர்தல் எந்த வழியில் செல்லும் என்பதை இந்த மாநிலங்களவைத் தேர்தல் முடிவு செய்யும் என்றும் கூறினார்.

பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார்?

செய்தியாளர் சந்திப்பில், பகுஜன் சமாஜ் கட்சியின் 6 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸுடன் இணைவது தொடர்பான கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குக் பதிலளித்த டாக்டர் சுபாஷ் சந்திரா, சட்டசபை அமைக்கப்பட்ட நேரத்தில் அவர்கள் பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்தவர்கள். இப்போது தேர்தல் நேரத்தில் எனக்கு கிடைத்த பட்டியலின்படி, காங்கிரஸ். உறுப்பினராக காட்டப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க | PF தொகையை மாற்றணுமா: வீட்டில் இருந்தபடியே செய்யலாம், எளிய செயல்முறை இதோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

சச்சின் பைலட்டுக்கு வாய்ப்பு - டாக்டர் சுபாஷ் சந்திரா

சச்சின் பைலட்டின் தந்தையுடன் தனக்கு நல்ல நட்பு உண்டு என்று கூறிய மாநிலங்களவை சுயேட்சை வேட்பாளர் டாக்டர் சுபாஷ் சந்திரா, சச்சின் பைலட்டுக்கு இது ஒரு வாய்ப்பு என்றும் கூறினார். அவர் கடின உழைப்பாளி. இங்கு அவருக்கு ஒரு பெரிய வாய்ப்பு வந்துள்ளது. இந்த வாய்ப்பை இன்று தவறவிட்டால் 2028 வரை முதல்வராகும் வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தார்.

Trending News