குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இந்தியா விடுத்த அழைப்பினை ஏற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுத்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற உள்ள சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சி ஜனவரி 26 -ம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு அழைப்பு விடப்பட்டது.
தற்போது இது குறித்து வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் சாரா சாண்டர்ஸ், இந்தியாவிற்கு வரும்படி டிரம்பிற்கு அழைப்பு விடப்பட்டது என்ற தகவலை உறுதிப்படுத்தினார். ஆனால் இதுபற்றி இறுதி முடிவு எடுக்கப்பட்டு விட்டது என்பது தெரிய வரவில்லை என்று கூறினார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா விடுத்த அழைப்பினை ஏற்க மறுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து டெல்லியில் இருக்கும் அமெரிக்க தூதரகத்திடம் கேட்டபோது, ‘அதிபரின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து வெள்ளை மாளிகை தான் பதில் தர வேண்டும்' என்று சொல்லிவிட்டது.