டொனால்ட் டிரம்ப் வருகை: முக்கிய 5 ஒப்பந்தங்கள்; உலக அரங்கில் கூடும் இந்தியாவின் மதிப்பு

டிரம்ப்-மோடி நட்பைத் தவிர, இந்த சுற்றுப்பயணத்தில் இரு நாடுகளும் ஐந்து ஒப்பந்தங்களை செய்யப் போகின்றன. இது இந்தியாவின் மதிப்பை உலக அரங்கில் உயர்த்தும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 24, 2020, 08:17 AM IST
டொனால்ட் டிரம்ப் வருகை: முக்கிய 5 ஒப்பந்தங்கள்; உலக அரங்கில் கூடும் இந்தியாவின் மதிப்பு title=

புது டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் (Donald Trump) சில மணி நேரத்தில் இந்தியா வந்தடைவார். பிரதமர் நரேந்திர மோடி அவரை குஜராத்தின் அகமதாபாத்தில் வரவேற்பார். மேலும் அவரை வரவேற்க மோட்டேரா ஸ்டேடியம் தயாராக உள்ளது. டிரம்ப்-மோடி நட்பைத் தவிர, இந்த சுற்றுப்பயணத்தில் இரு நாடுகளும் ஐந்து ஒப்பந்தங்களை செய்யப் போகின்றன, இது இந்திய-அமெரிக்க உறவுகளை மறுவரையறை செய்யும். உள்நாட்டு பாதுகாப்பு, அறிவுசார் சொத்துச் சட்டம், சிவில் அணுசக்தி ஒப்பந்தம், பாதுகாப்பு ஒப்பந்தம் மற்றும் வரையறுக்கப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் ஆகியவை இதில் அடங்கும். அதில் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பார்த்தால், டொனால்ட் டிரம்ப் இந்தியாவுக்கு வருவதற்கு முன்பே ஒரு விரிவான உடன்படிக்கைக்கு அதிக வாய்ப்பில்லை என்று கூறியிருந்தார் குறிப்பிடத்தக்கது.

இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவிஷ்குமார் கூறுகையில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் பரஸ்பர உறவுகள் மற்றும் எச் -1 பி விசா போன்ற பிரச்சனைகள் குறித்து ஆலோசனை செய்யப்படும். என்று கூறினார். டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் விசா விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. அதற்குப் பிறகு, இந்திய இளைஞர்களின் அமெரிக்கா கனவு எளிதானது அல்ல என்ற நிலை உருவாகி உள்ளது. அமெரிக்க அதிபரும், அவரது மனைவி மலேனியா டிரம்பும் இந்தியா வருகின்றனர். டிரம்ப் 36 மணிநேர பயணத்திற்கு பிறகு அகமதாபாத் வந்தடைவார். அதன் பின்னர் ஆக்ராவுக்கு செல்வார்கள். டெல்லிக்கு வந்த பிறகு இருதரப்பு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படும்.

மூலோபாய சிக்கல்கள் குறித்து அதிகமாக ஆலோசனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்கா-தலேபான் உடன்படிக்கை மற்றும் பாகிஸ்தானுக்கு சீனா அளித்த உதவிகளுக்குப் பிறகு, பிரதமர் மோடி இந்தியாவின் தரப்பை உறுதியாக நிறுத்துவார். அதே நேரத்தில், டொனால்ட் டிரம்ப் அமெரிக்கப் பொருட்களுக்கான இறக்குமதி வரியைக் குறைக்குமாறு இந்தியப் பிரதமரிடம் கேட்பார். எவ்வாறாயினும், பாதுகாப்பு ஒப்பந்தம் என்பது டிரம்ப் மற்ற விஷயங்களில் இந்திய நிலைப்பாட்டை புரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கும். இந்தியா ஒரு பெரிய ஆயுதங்களை வாங்கும் என்பதை டிரம்ப் அறிவார். இந்த விஷயத்தில் ரஷ்யா முன்னிலை வகிக்க முடியும். குறிப்பாக ரஷ்யாவுடனான எஸ் -400 ஏவுகணை ஒப்பந்தத்தின் பின்னர் டிரம்ப் அமைதியற்றவராக இருந்தார். இருப்பினும், பின்னர், அமெரிக்காவுடன் விமான பாதுகாப்பு ஒப்பந்தம் போட இந்தியா முன்வந்துள்ளது.

Trending News