நாட்டில் மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கும் நிலையில், அதைக்கூட கவனிக்காமல், ஆட்சியாளர்கள் மிகவும் பிஸியாக உள்ளதாக பிரியங்கா காந்தி வத்ரா குற்றசாட்டு..!
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டதில் இருந்து, அவர் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். மத்திய மற்றும் உத்தரபிரதேச பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில், நாட்டின் பொருளாதாரம் மற்றும் வேலையின்மை ஆகியவற்றை சுட்டிக்காட்டி பாஜக அரசை மீண்டும் கடுமையாக தாக்கியுள்ளார். இது குறித்து பிரியங்கா காந்தி வத்ரா வெள்ளிக்கிழமை மோடி அரசாங்கத்திடம் பேய்மயமாக்கல் ஒரு "அனைத்து தீமைகளையும் கொன்றவர்" என்று கூறி, இது ஒரு "பேரழிவு" என்பதை நிரூபித்தது, ஆனால் பொருளாதாரத்தை அழித்துவிட்டது என விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; "நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சேவைத்துறையில் எந்த வளர்ச்சியும் இல்லை. வேலைவாய்ப்பு குறைந்துகொண்டே வருகிறது. மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். ஆனால், ஆட்சியில் உள்ளவர்கள் மிகவும் பிஸியாக உள்ளனர்" என்று விமர்சித்துள்ளார்.
மேலும், "பாஜக அரசிடம் அனைவரும் கேட்கவேண்டியது, பாஜக ஆட்சிக் காலத்தில் யாரெல்லாம் பயனடைந்தார்கள் என்ற கேள்விதான். அமெரிக்காவில் நடைபெற்ற ஹவுடி மோடி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அந்நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் கலந்து கொண்டார். ஆனால், அமெரிக்காவில் பணியாற்ற விண்ணப்பித்த இந்தியர்களுக்கு எச்1பி விசாக்கள் குறைக்கப்பட்டன. பலரின் விசாக்கள் நிராகரிக்கப்பட்டன" என்று பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ளார்.
3 years since #Demonetisation and every claim made by the government and those hailing it as a slayer of all evils has been turned on its head. It proved to be a disaster that has all but destroyed our economy.
Anyone want to claim responsibility?#DeMonetisationDisaster
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) November 8, 2019
"ரூ .500 மற்றும் ரூ .1,000 நாணயத்தாள்கள் சட்டப்பூர்வ டெண்டராக நிறுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 8, 2016 அன்று தேசத்திற்கு அறிவித்தார். இது இது நமது பொருளாதாரத்தை அழித்ததைத் தவிர எந்த நன்மையையும் ஏற்படுத்தவில்லை". "யாராவது பொறுப்பேற்க விரும்புகிறீர்களா?" காங்கிரஸ் பொதுச் செயலாளர், 'DeMonetisationDisaster' என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.