பழைய 500, 1000 ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் 12.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது குறித்து ரிசர்வ் வங்கி துணை கவர்னர் ஆர். காந்தி கூறியுள்ளதாவது:- டிசம்பர் 10-ம் தேதி வரையில் வங்கிகளில் ரூ. 12.44 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், 4.61 லட்சம் கோடி ரூபாய் நோட்டுக்கள் வங்கிகளின் கவுண்டர்கள், ஏ.டி.எம் மையங்கள் மூலமாக விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் கரன்சி நோட்டுகளை வீடுகளில் வைத்து முடக்கி விட கூடாது. பண பரிவர்த்தனை ஆவணங்களை பரிசோதனை செய்யும்படி அனைத்து வங்கிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 8-ம் தேதி மத்திய அரசு 500, 1000 ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டு புதிய 500, 2000 நோட்டு அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.