புது டெல்லி: டெல்லியின் குளிர்காலம் (Delhi Winter) உச்சத்தில் உள்ளது. இன்று காலை முதல் டெல்லியில் (Delhi) கடுமையான குளிர் காலம் தொடங்கியது. இன்று வெப்பநிலை 5.8 டிகிரி செல்சியஸாக சரிந்தது என்று வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. டெல்லியை பொறுத்தவரை 22 ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்ற கடுமையான குளிர் காலம் (Winter Session) நிலவியது. டெல்லி மட்டுமல்ல, அதனை சுற்றியுள்ள பகுதிகளான நொய்டா, காசியாபாத், ஃபரிதாபாத் மற்றும் குருகிராம் ஆகிய மாவட்டங்களில் கடும் குளிர் தொடர்கிறது.
வெப்பநிலை 4 டிகிரிக்கு கீழே:
வானிலை (Climate) ஆய்வுத் துறையிடமிருந்து கிடைத்த தகவல்களின்படி, வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 28-30 க்கு இடையில் வெப்பநிலை 4 டிகிரி அல்லது அதற்கு குறைவாக இருக்கலாம். நேற்று (புதன்கிழமை) அதிகபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்சியஸாக இருந்தது. இது இந்த சீசனுக்கான சராசரியை விட ஏழு டிகிரி குறைவாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 5.5 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது. இது சராசரியை விட மூன்று டிகிரி குறைவாக இருந்தது.
காலையிலும் மாலையிலும் அடர்த்தியான மூடுபனி இருக்கும்:
வெப்பநிலை வீழ்ச்சியால் அடர்ந்த பனிமூட்டம் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்படும் என்றும் அஞ்சப்படுகிறது. வெப்பநிலை குறைந்து வருவதால், தலைநகர் டெல்லி உட்பட என்.சி.ஆரிலும் காலையிலும் மாலையிலும் அடர்த்தியான மூடுபனி இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதன் காரணமாக, ரயில் மற்றும் விமானப் பயணம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
நாட்கள் | வெப்பநிலை |
26 டிசம்பர் | 5.6 |
27 டிசம்பர் | 5.0 |
28 டிசம்பர் | 4.0 |
29 டிசம்பர் | 4.0 |
30 டிசம்பர் | 4.0 |
தேசிய தலைநகரின் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் உள்ளது. காற்றின் தரம் மற்றும் வானிலை மதிப்பீட்டு முறைமைப்படி, டெல்லியின் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு இன்று (வியாழக்கிழமை) காலை 258 ஆக பதிவாகியுள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.