டெல்லியில் அனுமன் ஜெயந்தி அன்று நடந்த வன்முறை வழக்கில், முக்கிய குற்றவாளிகளான அன்சார் மற்றும் அஸ்லாம் ஆகியோரை திங்கள்கிழமை வரை போலீஸ் காவலில் வைக்க ரோகினி நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தவிர மற்ற குற்றவாளிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வன்முறைக்குப் பிறகு டெல்லி காவல்துறை வேகமாகச் செயல்படுகிறது. அத்துடன் இந்த வழக்கில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையில் டெல்லி போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் மற்ற குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து டெல்லியில் வன்முறை நடந்த இடத்தில் போலீசார் தடயங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது, டெல்லி போலீஸார் கூறுகையில், கடந்த 15ம் தேதி தான் அன்சாருக்கும், அஸ்லமுக்கும் ஒரு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிய வந்தது. இதற்குப் பிறகு இவர்கள் சதித் திட்டம் தீட்டினர் என்றனர்.
மேலும் படிக்க | ஹனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் மீது தாக்குதல்; 9 பேர் கைது
இந்த வழக்கில் 21 பேரை போலீசார் கைது செய்தனர்
ஜஹாங்கிர்புரி வன்முறை வழக்கில் கடுமையான நிலைப்பாட்டை எடுத்த டெல்லி காவல்துறை இதுவரை மொத்தம் 21 பேரை கைது செய்துள்ளது. அதே சமயம் 2 சிறார்களும் போலீசாரிடம் சிக்கியுள்ளனர். குற்றவாளிகளிடம் இருந்து இதுவரை 3 கைத்துப்பாக்கிகள் மற்றும் 5 வாள்களையும் போலீசார் மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வழக்கு குற்றப்பிரிவு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது
இந்த நிலையில் தற்போது ஜஹாங்கிர்புரி வன்முறை வழக்கு குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. குற்றப்பிரிவு சிறப்பு ஆணையர் ரவீந்தர் யாதவ் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். இந்த வழக்கில் குற்றப்பிரிவு விசாரணைக்கு மாவட்ட காவல்துறை ஒத்துழைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Corona XE Variant: மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR