"toolkit" விவகாரம்; ட்விட்டர் இந்தியா நிறுவனத்தில் தில்லி போலீஸார் சோதனை

டில்லி காவல்துறை, இன்று குர்கான் மற்றும் தில்லியில் உள்ள லாடோ சாராய் ஆகிய இடங்களில் உள்ள ட்விட்டர் இந்தியா அலுவலகத்தில் சோதனை நடத்தியது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : May 24, 2021, 11:22 PM IST
  • குர்கான் மற்றும் தில்லியில் உள்ள லாடோ சாராய் ஆகிய இடங்களில் உள்ள ட்விட்டர் இந்தியா அலுவலகத்தில் சோதனை.
  • அடிப்படை உண்மையை அறிந்திருப்பதாகக் கூறும் ட்விட்டர் இதனை தெளிவுபடுத்த வேண்டும்.
  • உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிவுறுத்தல்களுக்கு எதிராக அவர்கள் செயலபட்டதாக குற்றசாட்டு
"toolkit" விவகாரம்; ட்விட்டர் இந்தியா நிறுவனத்தில் தில்லி போலீஸார் சோதனை title=

மத்திய அரசுக்கு எதிரான காங்கிரஸின் "toolkit" தொடர்பாக சம்பித் பாத்ரா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பதிவிட்ட ட்வீட்களில் "சந்தேகத்துக்கிடமானது" என்ற ரீதியில் 'manipulation media' என ட்விட்டர் (Twitter) டேக் செய்ததற்கான விளக்கம் அளிக்குமாறு, முன்னதாக நோட்டீஸ் அனுப்பிய டில்லி காவல்துறை, இன்று குர்கான் மற்றும் தில்லியில் உள்ள லாடோ சாராய் ஆகிய இடங்களில் உள்ள ட்விட்டர் இந்தியா அலுவலகத்தில் சோதனை நடத்தியது.

இதன மூலம், இந்த ட்வீட்கள் சந்தேகத்திற்கிடமானது  என்பது தொடர்பாக எங்களிடம் இல்லாத சில தகவல்கள் ட்விட்டரிடம் உள்ளன என்பதால் அது குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுமாறு   ட்விட்டருக்கு அனுப்பிய நோட்டீஸில்  காவல்துறை கூறியது.

"இந்த தகவல் விசாரணைக்கு மிகவும் தேவை. விசாரணையை நடத்தும் சிறப்பு பிரிவு, உண்மையை அறிய விரும்புகிறது. அடிப்படை உண்மையை அறிந்திருப்பதாகக் கூறும் ட்விட்டர் (Twitter) இதனை தெளிவுபடுத்த வேண்டும்" என்று நோட்டீஸில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ட்விட்டருக்கு எழுதிய கடிதத்தில், மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் "டூல்கிட்"  தொடர்பான சில தகவல்களை "manipulation media" என்று குறிப்பிடுவதை எதிர்த்து அதனை நீக்குமாறு கூறியிருந்தது.

ALSO READ | COVID-19: கருப்பு பூஞ்சையை அடுத்து பீதியை கிளப்பும் வெள்ளை பூஞ்சை

இது விவகாரம் அமலாக்க துறை விசாரணை செய்ய இருப்பதால்,  டேக்கை அகற்றுமாறு மத்திய அரசு ட்விட்டரைக் கேட்டுக்கொண்டது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் முன்னதாக  பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பிட் பத்ரா, காங்கிரஸின் சமூக ஊடக தொண்டர்கள், புதிய கோவிட் -19 திரிபுகளை, "இந்திய திரிபு" அல்லது "மோடி திரிபு" என்று அழைக்குமாறு டூல் கிட்டில் உள்ளதாகக் கூறினார். உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிவுறுத்தல்களுக்கு எதிராக அவர்கள் செயலபட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
 
இருப்பினும், பாஜக தலைவர் ஜே.பி.நதா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, கட்சி செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா, கட்சித் தலைவர் பி.எல்.சந்தோஷ் மற்றும் பலர் மீது போலி மற்றும் போலி ஆவணங்களை பகிர்ந்து கொண்டதாகக் குற்றம் சாட்டியதற்காக டெல்லி போலீஸ் கமிஷனருக்கு கடிதம் எழுதியுள்ளார் 

#CongressToolkitExposed என்ற ஹேஷ்டேக்குடன் சமூக ஊடகங்களில் பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்த குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் மறுத்து,  இவை போலி ஆவணங்கள் என தில்லி போலீஸ் கமிஷனருக்கு காங்கிரஸ் கடிதம் எழுதியது.

ALSO READ | COVAXIN: ஜூன் 1ம் தேதி முதல் 2-18 வயதினருக்கு தடுப்பூசி பரிசோதனை

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News