Earthquake in Delhi : தலைநகர் டெல்லியில் புத்தாண்டின் முதலான காலை சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது. ஹரியானா மாநிலத்தின் ஜஜ்ஜார் அருகே 3.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் காயம் அல்லது சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை. " ஜன. 1, 2023 அன்று நிகழ்ந்த நிலநடுக்கத்தின் ரிக்டர் அளவு 3.8 ஆகும். இது அதிகாலை 1 மணியளவில் உணரப்பட்டுள்ளது. ஹரியானாவின் ஜஜ்ஜார் நகரில் இருந்து வடக்கு-வடமேற்கு திசையில் 11 கி.மீ., நிலநடுக்கம் மையம் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
2023 : பெயரே கேட்டாலே சும்மா அதிருதுல்ல
#Earthquake in Delhi, 2023 be like : pic.twitter.com/YLcXSrj5EI
— Gautam Rajesh Shelley (@gautamrshelley) December 31, 2022
மேலும் படிக்க | அமெரிக்காவை மிரட்டும் புதிய வகை கொரோனா தொற்று... இப்போது இந்தியாவில்!
இதேபோன்ற நவம்பர் 9, 12 ஆகிய தேதிகளில் டெல்லியிலும், அதன் சுற்றியுள்ள பகுதிகளிலும் அடுத்தடுத்து நிலநடுக்கம் உணரப்பட்டது. கடந்த நவ. 9 அன்று நள்ளிரவு 2 மணியளவில், டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
And, there's a earthquake ..delhi NCR gets a rocking start to 2023 ..literally !
— Nivi Shrivastava (@msjunebug_nivi) December 31, 2022
அப்போது நேபாளத்தை மையம் கொண்டு நிலநடுக்கம் நிகழந்தது. தொடர்ந்து, கடந்த நவ. 12 அன்று டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள மாநிலங்களில் இரவு 8 மணிக்கு, நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமும், நேபாளத்தை மையம் கொண்டு நிகழ்ந்தது. நவ. 12ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கம், 5.4 ரிக்டர் அளவில் நிகழ்ந்ததாக கூறப்பட்டது. தற்போது, புத்தாண்டின் தொடக்கத்திலேயே டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க | பிறந்தது ஆங்கில புத்தாண்டு - மக்கள் உற்சாக வரவேற்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ