ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் ஆலோசகரானார் பிரசாந்த் கிஷோர்

அடுத்த வருடம் நடக்க உள்ள டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் ஆலோசகராக பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் நியமனம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 14, 2019, 01:27 PM IST
ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் ஆலோசகரானார் பிரசாந்த் கிஷோர் title=

புதுடெல்லி: டெல்லியில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு ஆம் ஆத்மி கட்சி (Aam Aadmi Party) தயாராகி வருகிறது. இன்று (சனிக்கிழமை) காலை, ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal)  ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் (Prashant Kishor) அவர்களின் ஐ-பேக் நிறுவனம், இப்போது ஆம் ஆத்மி கட்சிக்கு வேலை பார்க்கும் என்று அர்விந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார். அதே நேரத்தில், முதல்வரின் ட்வீட்டை மறு ட்வீட் செய்து டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, இந்த முறை 67 ஐ தாண்டுகிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

அதாவது கடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் மொத்தமுள்ள 70 இடங்களில் 67 இடங்களில் மாபெரும் வெற்றி பெற்றது. இதனால் தான் இந்த முறை 67-க்கும் மேலான இடங்களில் வெற்றியை பெறுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பத்தில் சிட்டிசன்ஸ் பார் அக்கவுண்டபுள் கவர்னன்ஸ் என்ற அமைப்பில் வேலை பார்த்து வந்த பிரசாந்த் கிஷோர், கருத்து வேறுபாடு காரணமாக, அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறி இந்தியன் பொலிட்டிகல் ஆக்சன் கமிட்டி என்ற புதிய அமைப்பை தொடங்கினார். பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் ஆந்திரா பிரதேச முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுத்துவர் தான் இந்த பிரசாந்த் கிஷோர். 

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News