டெல்லிக்கு மக்களே ஓட்டு போடுங்கள்... காலை 8 மணி முதல் வாக்களிப்பு...

இன்று நடைபெறவுள்ள 70 பேர் கொண்ட டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் ட் தயார். ஷாஹீன் பாக் மற்றும் பிற முக்கிய வாக்குச் சாவடிகளிலும் கூடுதல் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 8, 2020, 02:06 AM IST
டெல்லிக்கு மக்களே ஓட்டு போடுங்கள்... காலை 8 மணி முதல் வாக்களிப்பு... title=

புது டெல்லி: டெல்லி சட்டமன்றத் தேர்தல் 2020 சனிக்கிழமை (பிப்ரவரி 8) காலை 8 மணி முதல் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் வாக்களிப்பு நடைபெறும். சனிக்கிழமை நடைபெறவுள்ள 70 பேர் கொண்ட டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை தேர்தல் அதிகாரிகள் முடித்துள்ளனர். மேலும் தேசிய தலைநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை கடுமையாக்கப்பட்டதோடு ஷாஹீன் பாக் மற்றும் பிற முக்கிய வாக்குச் சாவடிகளிலும் கூடுதல் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

டெல்லியில், 1.47 கோடி மக்கள் வாக்களிக்கும் உரிமையை பெற்றுள்ளனர் மற்றும் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்தவை. சில நாட்களுக்கு முன்னர், காங்கிரசும் பாஜகவும் தங்கள் பிரச்சாரத்தை ஆக்ரோஷமாக நடத்தின.

ஈ.வி.எம் இயந்திரம் முழு பாதுகாப்பனது:
டெல்லியின் தலைமை தேர்தல் அதிகாரி ரன்பீர் சிங் கூறுகையில், அனைத்து ஈ.வி.எம் இயந்திரமும் சோதனை செய்யப்பட்டுள்ளன. அவை முழு பாதுக்காப்பு கொண்டவை. அவற்றை சேதப்படுத்த முடியாது. ஈ.வி.எம்-கள் வைக்கப்பட்டுள்ள அறையில் பாதுகாப்புப் பணியாளர்கள் காவலில் உள்ளனர். பகல் நேரத்தில், அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள தேர்தல் தொழிலாளர்கள் ஈ.வி.எம் மற்றும் பிற வாக்களிக்கும் பொருட்களை பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்வார்கள். 

ஏராளமான வாக்குச் சாவடிகள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளன. சில வாக்குச் சாவடிகளில் ஏற்பாடுகள் சரி செய்யப்பட்டு வருகிறது. மாதிரி வாக்குச் சாவடிகள் 70 தொகுதிகளிலும் உள்ளன. அதில் தலா ஒரு பிங்க் சாவடி இருக்கும்.

ஷாஹீன் பாக் CAA போராட்டம்:
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு (சிஏஏ) எதிர்ப்பு தெரிவித்து ஷாஹீன் பாக் நகரில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களை கருத்தில் கொண்டு, டெல்லியின் தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம், இப்பகுதியின் கீழ் வரும் ஐந்து வாக்குச் சாவடிகளையும் பாதுகாப்பு பலப்படுத்தி உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இப்பகுதியில் தீவிரமான கண்காணித்து வருவதாகவும், வாக்குப்பதிவு நடவடிக்கைகள் நடைபெறும் பகுதிகளில் எந்த தடையும் இல்லை. எனவே, வாக்காளர்கள் எந்தவிதமான பிரச்சினையையும் எதிர்கொள்ள வேண்டியதில்லை என்றார்.

70 இடங்களில் 672 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்:
டெல்லி தேர்தலில் 1,47,86,382 பேருக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளது. அதில் 2,32,815 வாக்காளர்கள் 18 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள். தேர்தலுக்காக மூன்று வாரங்களுக்கும் மேலாக நீடித்த அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு முடிவுக்கு வந்தது. டெல்லியில் 70 சட்டசபை இடங்களுக்கு 672 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

டெல்லி முழுவதும் பாதுகாப்பு:
பாதுகாப்பு காரணங்களுக்காக மத்திய ஆயுத போலீஸ் படையின் (சிஏபிஎஃப்) 190 நிறுவனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக சிறப்பு காவல் ஆணையர் (புலனாய்வு) பிரவீர் ரஞ்சன் தெரிவித்தார். முக்கியமான வாக்குச் சாவடிகளைப் பொருத்தவரை, 516 இடங்களில் 3704 சாவடிகள் இந்த வகையில் அடங்கும் என்று அவர் கூறினார். சமீபத்தில், தேர்தல் அலுவலக அதிகாரிகள் போராட்டக்காரர்களை சந்தித்து வாக்களிக்க ஊக்குவித்தனர்.

கியூஆர் குறியீடு பயன்பாடு:
இந்த முறை, மொபைல் பயன்பாடுகள், கியூஆர் குறியீடுகள், சமூக ஊடக இன்டர்பேஷ் போன்ற தொழில்நுட்பங்களும் தேர்தல்களில் பயன்படுத்தப்படுகின்றன. டெல்லியின் 11 மாவட்டங்களில் ஒரு சட்டசபை இருக்கை தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதில் வாக்காளர் ரசீதை வாக்கு சாவடிக்கு கொண்டு வராவிட்டால், ஹெல்ப்லைன் பயன்பாட்டில் இருந்து ஸ்மார்ட்போன் மூலம் கியூஆர் குறியீட்டை வாக்காளர் பெற முடியும். இவற்றில் சுல்தான்பூர் மஜ்ரா, சீலாம்பூர், பல்லிமரன், பிஜ்வாசன், திரிலோக்புரி, ஷாகுர் பஸ்தி, புது தில்லி, ரோஹ்தாஸ் நகர், சத்தர்பூர், ராஜோரி கார்டன் மற்றும் ஜங்புரா ஆகியவை அடங்கும்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News