Covid-19: லாக்-டவுன் அடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீட்டிற்கு செல்ல முயன்றபோது குறைந்தது 22 பேர் பலி

ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்ப முயற்சியில் அவர்களில் பலர் இறந்துவிட்டனர். இதுவரை 22 புலம்பெயர்ந்தோரின் இறப்புகள் ஆவணப்படுத்தப்பட்டாலும், உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Mar 30, 2020, 05:14 PM IST
Covid-19: லாக்-டவுன் அடுத்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீட்டிற்கு செல்ல முயன்றபோது குறைந்தது 22 பேர் பலி title=

புது டெல்லி: கொரோனா வைரஸின் பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்ட 21 நாள் லாக்-டவுனுக்கு மத்தியில், நகரங்களில் வேலை செய்த ஏழை தொழிலாளர்கள் பலர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல மாநில எல்லைகளில் இருந்து பல நூறு கிலோமீட்டர் தூரத்தை கடந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்ப முயற்சித்து வருகின்றனர். தற்போது அவர்களில் பலர் இறந்துவிட்டனர். இதுவரை 22 புலம்பெயர்ந்தோரின் இறப்புகள் ஆவணப்படுத்தப்பட்டாலும், உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

வணிகங்கள், நிறுவனங்கள் மூடப்பட்டதும், ஏராளமான தினசரி கூலித் தொழிலாளர்கள், அவர்களில் பலர் தாங்கள் பணிபுரிந்த இடத்திலேயே வசித்து வந்தனர். திடீரென்று அவர்களுக்கு பெரிய நகரங்களில் எந்தவிதமான வாழ்வாதாரமும் தங்குமிடமும் இல்லாமல் போய்விட்டனர். அவர்களில் ஆயிரக்கணக்கானோர் தங்கள் குடும்பங்கள் உட்பட, மாநிலங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலைகளில் தங்கள் வீடுகளுக்கு நோக்கி அணிவகுத்துச் சென்றனர். அவர்கள் செல்லும் வழியில், பலரும் தாக்கப்பட்டனர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் சமூக தொலைதூர விதிகளை மீறியதற்காக காவல்துறையினரால் எல்லைகளிலிருந்து அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளி, 39 வயதான டெல்லியில் இருந்து தனது சொந்த ஊரான மத்திய பிரதேசத்திற்கு கால்நடையாக புறப்பட்டவர். 200 கி.மீ தூரத்தில் நடந்து சென்று சரிந்து இறந்தார் என்று டைம்ஸ் ஆப் இந்தியா சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது. அவர் டெல்லியில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். 

ரன்வீர் சிங் வியாழக்கிழமை அதிகாலை 300 கி.மீ தூரத்தில் உள்ள மத்திய பிரதேச மொரேனாவுக்கு நடக்கத் தொடங்கினார். பயணத்தின் போது அவருடன் இரண்டு தோழர்கள் இருந்ததாக இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

அவர் ஆக்ரா மாவட்டத்தை அடைந்த போது மார்பு வலி ஏற்பட்டு , டுஞ்சாலையில் கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. அங்கு அருகிலுள்ள கடையின் உரிமையாளர் அதை பார்த்து, அவருக்கு உதவ முயன்றார். "கடை உரிமையாளர் அவரை ஒரு கம்பளத்தின் மீது படுக்க வைத்து தேநீர் மற்றும் பிஸ்கட் வழங்கினார்" என்று உள்ளூர் காவல் நிலைய அதிகாரி அரவிந்த்குமார் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கு தெரிவித்தார். ஆனால் வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் அவர் இறந்தார்.

அந்த நபரின் பிரேத பரிசோதனையில் அவர் சோர்வினால் மாரடைபு ஏற்பட்டு இறந்துவிட்டார் என்பதைக் காட்டியது. பிரேத பரிசோதனையில் மாரடைப்பு மரணத்திற்கு காரணம் என்று தெரியவந்தது. 

மூன்று குழந்தைகள் இருப்பதாகவும், மூன்று ஆண்டுகளாக டெல்லியில் பணிபுரிந்து வருவதாகவும் சிங்கின் சகோதரர் கூறினார். அவர் [சிங்] வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் கிராமத்திற்கு கால்நடையாக புறப்பட்டார் என்று அவர் கூறினார். “நாங்கள் ஏழை விவசாயிகள். அவரின் சம்பாதியத்தில் தான் அவரது குடும்பம் வழி நடத்தப்பட்டது. தற்போது அவரது குழந்தைகள் எப்படி உயிர்வாழ்வார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது என வேதனையுடன் கூறினார்.

இதற்கிடையில், குஜராத்தில் உள்ள சூரத்தில் 62 வயதான ஒருவர் வெள்ளிக்கிழமை ஒரு மருத்துவமனையில் இருந்து தனது வீட்டிற்கு 8 கி.மீ தூரத்திற்கு நடந்து சென்று இறந்தார். 

மகாராஷ்டிரா-குஜராத் எல்லையில் உள்ள பிலாத் நகரத்திலிருந்து காவல்துறையினரால் திருப்பி திருப்பி வசாய்க்கு திரும்பிச் சென்ற நான்கு புலம்பெயர்ந்தோர் சனிக்கிழமை அதிகாலை வீரார் பகுதியி ஒரு லாரி அவர்கள் மீது மோதியதில் கொல்லப்பட்டனர். இந்த நான்கு பேரும் குஜராத்தில் நுழைந்த பின்னர் ராஜஸ்தானில் உள்ள தங்கள் கிராமங்களை அடைய விரும்பிய ஏழு பேர் கொண்ட குழுவில் ஒரு பகுதியாக இருந்தனர்.

சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய லாரி டிரைவர் பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். குடியேறியவர்களில் மூன்று பேர் மும்பையில் ஒரு தேநீர் கடை மற்றும் கேண்டீன்களில் பணிபுரிந்தனர்.

மற்றொரு சம்பவத்தில், சாலை விபத்தில் ஹைதராபாத்தின் புறநகரில் 18 மாத குழந்தை உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். ஏழை தொழிலாளர்கள் அடங்கிய குழு, கர்நாடகாவின் ரைச்சூருக்கு திரும்பிக் கொண்டிருந்தது.

தெலுங்கானாவின் சூர்யாபேட்டை மாவட்டத்தில் ஒரு கட்டுமான நிறுவனத்தில் பணிபுரிந்த 31 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திறந்த டிரக்கில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ​​மாம்பழம் ஏற்றிய லாரி மீது வாகனம் மோதியது. இறந்தவர்களில், மூன்று ஆண்கள், ஒரு சிறுவன் மற்றும் ஒன்பது வயது சிறுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தமிழ்நாட்டின் தேனி மாவட்டம் ராசிங்கபுரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட காட்டுத் தீ விபத்தில் ஒரு வயது குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர். லாக்-டவுன் காரணமாக மூடப்பட்டிருந்த பிரதான சாலைக்கு பதிலாக வனப் பாதையில் செல்லும்போது விபத்தில் சிக்கி பலியாகினர். ஆறு பெண்கள், மூன்று ஆண்கள் மற்றும் ஒரு குழந்தை - வனக் கால்வாய் வழியாக நடந்து கொண்டிருந்தபோது, ​​காட்டுத் தீ அவர்களைச் சூழ்ந்தது.

 

இதற்கிடையில், ஹரியானாவில் கால்நடையாக வீடு சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் மூன்று தொழிலாளர்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் நசுக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸ் காரணமாக 21 நாள் நாடு தழுவிய லாக்-டவுன் மத்தியில், ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலை, பணம் மற்றும் தங்குமிடம் இல்லாமல் போய்விட்டனர் மற்றும் பெரிய நகரங்களிலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு அணிவகுத்து வருகின்றனர். உத்தரபிரதேசம் மற்றும் டெல்லி அரசாங்கங்கள் அவர்களை பேருந்துகள் மூலம் வீட்டிற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்துள்ளன. கொரோனா வைரஸின் பரவலை சரிபார்க்க சமூக தொலைவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நேரத்தில் டெல்லியின் ஆனந்த் விஹார் இன்டர்ஸ்டேட் பஸ் டெர்மினலில் பேருந்துகளில் ஏற ஏராளமான மக்கள் காத்திருப்பதை சமூக ஊடகங்களில் வீடியோக்கள் காண்பித்தன.

இந்தியாவில் 900 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகள் உள்ளன. மேலும் 19 பேர் இறந்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Trending News