சிலிண்டர் விலை: 2014-ல் ரூ.400, மோடி ஆட்சியில் ரூ.1200 - வாக்குறுதி என்னாச்சு?

பிரதமர் மோடி ஆட்சியில் சிலிண்டர் விலை ரூ.1200 எட்டியிருப்பது சாமானியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 2014 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது 400 ரூபாய் இருந்த சிலிண்டர் விலையை 200 ரூபாய் என குறைப்பேன் என கூறியிருந்தார் அவர்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 1, 2023, 10:11 AM IST
  • சிலிண்டர் விலை 2014-ல் 400, இப்போது ரூ.1200
  • தேர்தல் நெருங்கும் நேரத்தில் ரூ.200 குறைப்பு
  • பாதியாக குறைப்பேன் கூறிய வாக்குறுதி என்னானது?
சிலிண்டர் விலை: 2014-ல் ரூ.400, மோடி ஆட்சியில் ரூ.1200 - வாக்குறுதி என்னாச்சு? title=

பிரதமர் மோடி வாக்குறுதி

பிரதமர் மோடி முதன்முறையாக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, அதாவது 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேரதல் பிரச்சாரத்திற்கு இந்தியா முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது இருந்த காங்கிரஸ் கட்சியை விலைவாசி ஏற்றம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கடுமையாக விமர்சித்தார். 

குறிப்பாக சாமானியர்கள் அதிகமாக பயன்படுத்தும் சிலிண்டர் விலை ஏற்றம் குறித்து அனைத்து பிரச்சாரங்களிலும் முதன்மைப்படுத்தி பேசிய அவர், அப்போது 400 ரூபாய் என இருந்த சிலிண்டர் விலையை 200 ரூபாயாக குறைப்பேன் என ஆவேசமாக கூறினார். ஆனால் அதனை பிரதமர் மோடி அரசு செய்ய தவறியதாக சாமானியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

மேலும் படிக்க | ரொம்ப கம்மி விலையில் கேஸ் சிலிண்டர் வாங்கணுமா? உடனே இதை படியுங்கள்

சிலிண்டர் விலை ஏற்றம்

2014-ல் கச்சா எண்ணெய் 93.17 டாலராக இருக்கும்போது பெட்ரோல் விலை 70 ரூபாய், சிலிண்டர் விலை 450 ரூபாய் என இருந்தது. ஆனால், இப்போது கச்சா எண்ணெய் விலை 75.73 டாலராக இருக்கிறது.

அதாவது 2014 ஆம் ஆண்டுடன் ஓப்பிடும்போது 2014 ஆம் ஆண்டை விட 18 டாலர் குறைவாக இருக்கிறது. அந்த விலையில் ஏன் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் விலை கொடுக்க முடியவில்லை என ஆதங்கத்தோடு கேட்கின்றனர். இதற்கு காரணமாக டாலர் மதிப்பை பலரும் குறிப்பிட்டு காட்டுகிறார்கள். 

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

ஆனால் அது குறித்தும் 2014 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் பேசியிருக்கும் இப்போதைய பிரதமர் மோடி, காங்கிரஸின் தவறான பொருளாதார கொள்கை மற்றும் ஊழல் காரணமாக இந்தியாவின் ரூபாய் மதிப்பு சரிந்துவிட்டதாகவும், தான் ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவின் ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக உயரும் என்றும், இந்தியா ரூபாயை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு ஆட்சி இருக்கும் என்று கூறினார்.

வரலாறு காணாத வீழ்ச்சி

ஆனால், இப்போதைய பிரதமர் மோடி ஆட்சியில் இந்திய வராலற்றில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியைக் கண்டு 80 ரூபாயைக் கடந்தது.

தேர்தல் பிரச்சாரத்தில் கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் விலையை பாதியாக குறைப்பேன், இந்திய ரூபாய் மதிப்பை உயர்த்துவேன் என கூறிவிட்டு இப்போது டாலர் மதிப்பு உயர்ந்துவிட்டது, அதனால் பெட்ரோல் டீசல் மற்றும் சிலிண்டர் விலை எல்லாம் உயர்ந்திருக்கிறது என விளக்கம் கொடுப்பது மோசடி தனமான விளக்கம் என குற்றம் சாட்டும் சாமானியர்கள், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் 200 ரூபாய் சிலிண்டர் விலை குறைப்பு என்பது தேர்தல் நாடகம் என்று விமர்சித்துள்ளனர். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த விலக் குறைப்புக்கு இணையாக விலை ஏற்றம் இருக்கும் என விமர்சித்துள்ளனர் நெட்டிசன்கள். 

மேலும் படிக்க | சமையல் கேஸ் சிலிண்டரைப் போலவே வணிக சிலிண்டர் விலையும் குறைந்தது! விலை ரூ 1,695

மேலும் படிக்க | படிப்படியாக குறையும் தக்காளி விலை.. செப்டம்பரில் ஆழ வைக்க ரெடியாக்கும் வெங்காயம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News