ஒடிசாவில் மணிக்கு 240 கி.மீட்டருக்கு மேல் பலத்த காற்று வீசிய நிலையில் ஃபானி புயல் இன்று கரையை கடந்தது.
ஒடிசாவில் ஃபானி புயல் இன்று காலை 8.30 மணிக்கு கரையை கடக்க தொடங்கியது. இதையடுத்து, ஒடிசாவின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
சென்னை அருகே வங்கக்கடலில் கடந்த மாதம் 25ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது புயலாக மாறியது. அந்தப் புயலுக்கு ‘ஃபானி’ என பெயர் சூட்டப்பட்டது. ‘ஃபானி’ புயல் தமிழ்நாட்டை தாக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் ‘ஃபானி’ புயல் பாதை மாறியது. அது மிக தீவிர புயலாக மாறி வட கிழக்கு திசை நோக்கி நகர்ந்து, ஒடிசாவை நோக்கி சென்றது.
தற்போது புரி, கோபால்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. கனமழையுடன், அதிக வேகத்தில் காற்று வீசியது.
இந்நிலையில், ஒடிசாவில் மணிக்கு 240 கி.மீட்டருக்கு மேல் பலத்த காற்று வீசிய நிலையில் பானி புயல் இன்று கரையை கடந்தது. சாகிகோபால் பகுதியில் மரங்கள் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். ஒடிசாவில் பல இடங்களில் மின்சார சேவையும், தொலைத் தொடர்பு சேவையும் பாதிப்பு அடைந்துள்ளன.
சாலையெங்கும் மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. மின் கோபுரங்கள், செல்போன் கோபுரங்கள் சாய்ந்துள்ளன.
#Odisha: Several trees uprooted in #Bhubaneswar as strong winds hit the region under the influence of #CycloneFani. pic.twitter.com/JXtmoCw1Ad
— ANI (@ANI) May 3, 2019
Rough sea weather conditions in Bhadrak, Odisha under the influence of #CycloneFani. pic.twitter.com/la0z3W5aVG
— ANI (@ANI) May 3, 2019
Odisha: Heavy rainfall and strong winds hit Ganjam as #FANI cyclone hits Puri coast with wind speed of above 175km/per hour. pic.twitter.com/30jdhND8L7
— ANI (@ANI) May 3, 2019
#WATCH Rain and strong winds hit Bhubaneswar as #FANI cyclone hits Puri coast with wind speed of above 175km/per hour. pic.twitter.com/QZYkk1EALI
— ANI (@ANI) May 3, 2019