மது பாட்டில்களை அழிக்க போலீஸ் போட்ட பிளான்... ட்விஸ்ட் வைத்த 'குடிமகன்கள்' - வைரல் வீடியோ

Viral Video: கடத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை புல்டோசரால் ஏற்றி அழிக்கும் நோக்கில் அதிகாரிகள் இருந்தபோது, அங்கு நடந்த திடீர் ட்விஸ்டை இதில் காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Sep 10, 2024, 10:03 PM IST
  • இது ஆந்திராவின் குண்டூரில் நடந்துள்ளது.
  • இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.
  • இந்த வீடியோ குறித்து விசாரணை
மது பாட்டில்களை அழிக்க போலீஸ் போட்ட பிளான்... ட்விஸ்ட் வைத்த 'குடிமகன்கள்' - வைரல் வீடியோ title=

Viral Video In India: மது குடிப்போர் இல்லை இல்லை... மது பிரியர்களின் அட்ராசிட்டிஸ் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. மதுவை ஜாலிக்காக, கொண்டாட்டத்திற்காக, கவலையை மறப்பதற்காக என வெவ்வேறு காரணங்களுக்காக குடிப்பவர்கள் இருக்கிறார்கள். உடல் வலி, மன வலி என அனைத்துக்கும் மதுவை மருந்து போல் அருந்துவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

இருந்தாலும் மது குடிப்பது தனிப்பட்ட நபரின் பிரச்னை மட்டுமில்லை... மது குடிப்பது பல நூற்றாண்டுகளாக மனித இனம் பின்பற்றி வரும் பழக்கவழக்கங்களில் ஒன்றுதான் என்றாலும் தற்போது பலராலும் அருந்தப்படும் மது என்பது உடலை உருக்கிவிடும் தன்மை கொண்டது என பல வல்லுநர்கள் தொடர்ந்து எச்சரித்த வண்ணம் உள்ளனர். மது குடிப்பதை இழிவாக பார்க்கக்கூடாது என்றாலும் மது குடிப்பதை பெருமையாக சொல்லவும் அதில் ஒன்றுமில்லை. மது அருந்துவதை புனிதப்படுத்துவதும், பொதுமைப்படுத்துவதும் சமூகத்தில் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தவல்லது. 

மது பிரியர்களின் அட்டகாசம்

எனவேதான், மதுவை விற்கும் அரசே மதுவிலக்குக்கு என தனி துறையையும் வைத்திருக்கிறது. காரணம், கடந்த சில மாதங்களுக்கு முன் கள்ளக்குறிச்சியில் நடந்த துயர சம்பவங்கள் பெருகிவிடக்கூடாது என்பதற்காகதான் மதுவை முற்றிலுமாக ஒழிக்காமல் அதில் சில நடைமுறைகளை அரசு பின்பற்றி வருகிறது. இருப்பினும், பல்வேறு இடங்களில் இருந்து மதுவை கடத்துவதும், மதுவை உற்பத்தி செய்வதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. அதனையும் அரசு தரப்பு தடுத்துதான் வருகிறது. 

மேலும் படிக்க | ராமேஸ்வரம் கஃபே வழக்கு குற்றப்பத்திரிகையில் திடுக்கிடும் தகவல்!

அப்படி ஆந்திர பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் அதிகாரிகளால் கைப்பற்ற கடத்தப்பட்ட மது பாட்டில்களை முற்றிலுமாக அழிக்கும் நிகழ்வு நடந்தது. அப்போது ஏற்பட்ட திடீர் ட்விஸ்ட்தான் தற்போது சமூகவலைதளங்களில் புயலை கிளப்பி வருகிறது. ஆந்திரா தலைநகரான அமராவதியில் இருந்து 40 கி.மீ., தூரத்தில் உள்ள குண்டூரில் இந்த சம்பவம் நடந்ததுள்ளது. 

கும்பலாக வந்து ஆட்டையை போட்ட நபர்கள்

அதாவது, சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்களை எட்குரு சாலையில் உள்ள தனியிடத்தில் புல்டௌசர் கொண்டு ஏற்றி முற்றிலுமாக அழிக்க அதிகாரிகள் திட்டமிட்டனர். அதற்காக அந்த மது பாட்டில்கள் அனைத்தையும் தரையில் அதிகாரிகள் அடுக்கி வைத்திருந்த நிலையில், அங்கு எங்கிருந்தோ வந்த திடீர் கூட்டமானது தரையில் வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை தூக்கிக்கொண்டு ஓடியது. போலீசார்கள் அதட்டியும் மிரட்டியும் அவர்களை தடுத்தாலும் அவர்கள் லாவகமாக பாட்டில்களை தூக்கிச் சென்றனர். 

ஒரு சிலரோ ஓரிரண்டு பாட்டில்களுடன் தப்பிக்க, மற்றவர்களோ கையில் கிடைத்தவை அனைத்தையும் அள்ளிக்கொண்டு ஓடினார்கள். போலீசார் நிலைமை கட்டுக்குள் கொண்டுவர மிகவும் கஷ்டப்பட்டதும் வீடியோவில் தெரிந்தது. ஒருகட்டத்தில் போலீசார் யாரையும் தடுப்பதை பார்க்க முடியவில்லை. நான்கு திசைகளில் இருந்தும் மது பிரியர்கள் ஓடி வந்து மது பாட்டில்களை தூக்கிச் சென்றனர். இதன் வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதைதொடர்ந்து, போலீசார் மத்தியில் கடும் அழுத்தம் எழுந்துள்ளன நிலையில், இந்த சம்பவம் எப்படி, யாரால் திட்டமிடப்பட்டது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

மேலும் படிக்க | டெல்லியில் ஜனாதிபதி ஆட்சியா? பாஜக ஆடும் ஆட்டம்.. முடிந்தால் செய் என ஆம் ஆத்மி சவால்
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News